மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறைக்கு ரூ.21,906 கோடி ஒதுக்கீடு: கருப்பை வாய் புற்றுநோயை தடுப்பதற்கான தடுப்பூசிக்கு ரூ.36 கோடி நிதி

காஞ்சிபுரம் மாவட்டம் காரப்பேட்டையில் உள்ள அரசு அறிஞர் அண்ணா நினைவு புற்று நோய் மருத்தவமனை மற்றும் ஆராய்ச்சி நிறுவனத்தை மாநில அளவிலான முதன்மை புற்றுநோய் மையமாக அறிவிக்கப்படும். அதனை தரம் உயர்த்தி உலகத்தரம் வாய்ந்த புற்று நோய் கண்டறிதல் மற்றும் கிகிச்சை, நோய் ஆதரவு சிகிச்சை உள்ளிட்ட பல்வேறு சேவைகளை 800 படுக்கைகளுடன் கூடிய தன்னாட்சி பெற்ற மையமாக செயல்படும் வகையில் அடுத்த 2 ஆண்டுகளில் ரூ.120 கோடி நிதி வழங்கப்படும்.

ஆரம்ப நிலையிலேயே புற்று நோய் கண்டறிதலை அறிமுகப்படுத்திட இடைநிலை மற்றும் மருத்துவகல்லூரி மருத்துவமனைகளுக்கு தேவையான நவீன மருத்துவ கருவிகள் மற்றும் மனிதவளம் ஆகியவற்றை ரூ.110 கோடி மதிப்பீட்டில் அடுத்த 3 ஆண்டுகளில் வழங்கிட அரசு திட்டமிட்டுள்ளது. கருப்பை வாய் புற்றுநோயை தடுக்கவும் தமிழ்நாட்டில் அந்நோயினை அறவை அகற்றிடவும் தப்பூசியை 14 வயதுடைய அனைத்து பெண் குழந்தைகளுக்கும் படிப்படியாக வழங்க ரூ.36 கோடி நிதி ஒதுக்கப்படும்.

அனைத்து மகளிரும் பயன்பெறும் வகையில் நடமாடும் மருத்துவ குழுக்கள் மூலம், முக்கிய புற்றுநோய்கள் மற்றும் இருதய நோய் ஆகியவற்றை கண்டறிவதற்கான சோதனைகள் மற்றும் வாழ்க்கைமுறை மாற்றங்கள் குறித்து ஆலோசனை வழங்ககுதல் ஆகிய பல்வேறு சேவைகளை வழங்கிட ரூ.40 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. தேசிய நல்வாழ்வு குழுமம் மூலம் செயல்படுத்தப்படும் திட்டங்களுக்கு ரூ.2,754 கோடியும், டாக்டர் முத்துலெட்சுமி ரெட்டி மகப்பேறு நிதியுதவித்திட்டத்திற்கு ரூ.1,092 கோடியும, முதலமைச்சரின் விரிவான மருத்துவ காப்பீட்டு திட்டத்திற்கு ரூ.1,461 கோடியும், அவசர ஊர்தி சேவைகளுக்கு ரூ.348 கோடியும் இந்த வரவு செலவு திட்டத்தில் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. அதன்படி இந்த வரவு செலவு திட்ட மதிப்பீடுகளில் மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறைக்கு ரூ.21,906 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

பேரவை எந்த துறைக்கு
எவ்வளவு நிதி?
துறை நிதி (கோடியில்)
காவல் ரூ.13,342
போக்குவரத்து ரூ.12,965
நீர்வளம் ரூ.9,460
சமூகநலன் ரூ.8,597
தொழில், குறு, சிறு, நடுத்த நிறுவனங்கள் ரூ.5,833
ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலன் ரூ.3,924
கல்வி ரூ.55,261
நகர்ப்புற வளர்ச்சி ரூ.34,396
ஊரக வளர்ச்சி ரூ.29,465
மக்கள் நல்வாழ்வு ரூ.21,906
எரிசக்தி ரூ.21,178
நெடுஞ்சாலை ரூ.20,722

* சிறுபான்மையினர் நலத்துறைக்கு ரூ.1,563 கோடி நிதி ஒதுக்கீடு: சாதிவாரியான கணக்கெடுப்பினை ஒன்றிய அரசு நடத்த தமிழக அரசு தொடர்ந்து வலியுறுத்தும்
தேசிய மக்கள் தொகை கணக்கெடுப்புடன் சாதிவாரியான கணக்கெடுப்பினையும் இணைந்து ஒன்றிய அரசு நடத்திட வேண்டும் என்று இவ்வரவு தொடர்ந்து வலியுறுத்தி வருகிறது. அதிகமான மாணவர் சேர்கை்கையுள்ள 27 கல்லூரி மாணவர் விடுதிகள் மற்றும் கடந்த 4 ஆண்டுகளில் கல்லூரி விடுதிகளாக தரம் உயர்த்தப்பட்ட 36 பிற்படுத்தப்பட்டோர், மிகவும் பிற்படுத்தப்பட்டோர், சீர்மரபினர் மற்றும் சிறுபான்மையினர் கல்லூரி மாணவர்கள் விடுதிகள் அடுத்த 2 ஆண்டுகளில் கட்டமைப்பு வசதி மேம்பாடு சிறப்பு பழுது நீக்கம், புதுப்பித்தல் பணிகள் மேற்கொள்ளப்பட்டு தரம் உயர்த்தி புதுப்பொலிவுடன் திகழ புதிய திட்டம் வகுக்கப்படும். பள்ளி படிப்பு உதவித்தொகை வழங்குவதற்காக ரூ.146 கோடியும், பள்ளி மேற்படிப்பு உதவி தொகை வழங்குவதற்காக ரூ.335 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளன.

சிறுபான்மையினரின் சமூக பொருளாதார மற்றும் கல்வி மேம்பாட்டிற்கென தமிழ்நாடு அரசு பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறது இதுவரை 159 கல்வி நிறுவனங்களுக்கு சிறுபான்மை நிலை சான்றிதழ் வழங்கப்பட்டது மட்டுமன்றி, இவற்றுள் 103 கல்வி நிறுவனங்கள் நிரந்தர சான்றிதழும் பெற்றுள்ளன. ஒன்றிய அரசு சிறுபான்மையின மாணவர்களுக்கு வழங்கி வந்த கல்வி உதவி தொகையினை கடந்த 2022ம் ஆண்டு முதல் நிறுத்திவிட்டாலும், தமிழ்நாடு அரசு வக்பு வாரியத்திற்கு வழங்கிய ரூ.12 கோடி நிதியை கொண்டு ஒரு லட்சத்திற்கு மேற்பட்ட 1 முதல் 8ம் வகுப்பு வரை அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் பயிலும் சிறுபான்மையின மாணவியர்களுக்கு கல்வி உதவி தொகை வழங்கப்பட்டு வருகிறது.

பழமை வாய்ந்த பள்ளிவாசல்களையும், தர்காக்களையும் பழுதுபார்ப்பதற்கும் சீரமைப்பதற்கும் வரும் நிதியாண்டில் ரூ.10 கோடி மானியம் வழங்கப்படும். அதேபோன்று பழமையான தேவாலயங்களை பழுதுபார்ப்பதற்கும், சீரமைப்பதற்கும் இந்த ஆண்டு ரூ.10 கோடி மானியம் வழங்கப்படும். இந்த வரவு செலவு திட்ட மதிப்பீடுகளில் பிற்படுத்தப்பட்டோர், மிகவும் பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நலத்துறைக்கு ரூ.1,563 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

The post மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறைக்கு ரூ.21,906 கோடி ஒதுக்கீடு: கருப்பை வாய் புற்றுநோயை தடுப்பதற்கான தடுப்பூசிக்கு ரூ.36 கோடி நிதி appeared first on Dinakaran.

Related Stories: