அரியலூர், மார்ச் 14: அரியலூர் வேலை வாய்ப்பு அலுவலகத்தில் டிரைவர், கண்டக்டர் பதிவு சரிபார்க்க அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து அரியலூர் மாவட்ட கலெக்டர் ரத்தினசாமி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு கூறியிருப்பதாவது, தமிழ்நாடு அரசு போக்குவரத்துக்கழக திருச்சி மண்டலத்தில் உள்ள காலியாக உள்ள டிரைவர், கண்டக்டர் பணியிடம் நிரப்பப்படவுள்ளது.
எனவே அரியலூர் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்துள்ள நபர்கள் ஏப்ரல் 11ம் தேதிக்குள் அலுவலக வேலை நாட்களில் டிரைவர், கண்டக்டர் உரிமைச்சான்று, வேலைவாய்ப்பு அலுவலக அடையாள அட்டை மற்றும் இதர கல்வி சான்றுகளுடன் நேரில் வந்து பதிவை சரிபார்த்து கொள்ளலாம்.
அருந்ததியர், தாழ்த்தப்பட்ட வகுப்பினர், பழங்குடியினர், மிகவும் பிற்படுத்தப்பட்ட வகுப்பினர் மற்றும் சீர்மரபினர் 45 வயதுக்குள், இதர வகுப்பினர் (பொதுப்பிரிவு) 40 வயதுக்குள், முன்னாள் ராணுவ வீரர்கள் 53 வயதுக்குள் இருக்க வேண்டும். மேலும் விவரங்களுக்கு 9499055914 என்ற தொலைபேசி எண்ணை தொடர்பு கொள்ளலாம். இவ்வாறு அவர் அதில் தெரிவித்துள்ளார்.
The post அரியலூர் வேலைவாய்ப்பு அலுவலகத்தில் டிரைவர், கண்டக்டர் பதிவு சரிபார்க்க அழைப்பு appeared first on Dinakaran.
