நாகப்பட்டினம் தேர்தல் நடைமுறைகளை மேம்படுத்த தயார்

 

நாகப்பட்டினம், மார்ச் 14: தேர்தல் நடைமுறைகளை மேம்படுத்துவது குறித்த கருத்துக்களை ஏப்ரல் மாதம் 30ம் தேதிக்குள் தெரிவிக்கலாம் என கலெக்டர் ஆகாஷ் தெரிவித்துள்ளார். தேர்தல் நடைமுறைகளை மேம்படுத்துவது குறித்து அரசியல் கட்சி பிரமுகர்களுடன் தேர்தல் ஆணையம் ஆலோசனை செய்ய உள்ளதாக அறிவித்துள்ளது. தேர்தல் நடைமுறைகளை சட்ட வரையறைகளுக்கு உட்பட்டு எவ்வாறு மேம்படுத்துவது என்பது குறித்து அனைத்து அரசியல் கட்சி தலைவர்களுடன் விரைவில் ஆலோசிக்க தேர்தல் ஆணையம் முடிவு செய்துள்ளது.

அதன்படி தலைமை தேர்தல் அலுவலர், மாவட்ட தேர்தல் அலுவலர், வாக்காளர் பதிவு அலுவலர் நிலையில் தீர்க்கப்படாத பிரச்சினைகளுக்கு தீர்வு காணும் வகையில் கருத்துகள் மற்றும் ஆலோசனைகளை ஏப்ரல் மாதம் 30ம் தேதிக்குள் தெரிவிக்கலாம். ஆலோசனைகளை நாகப்பட்டினம் மாவட்டத்தில் உள்ள அனைத்து தேசிய மற்றும் மாநில அரசியல் கட்சிகள் இந்திய தேர்தல் ஆணையத்திடம் தெரிவிக்கலாம் என தெரிவித்துள்ளார்.

The post நாகப்பட்டினம் தேர்தல் நடைமுறைகளை மேம்படுத்த தயார் appeared first on Dinakaran.

Related Stories: