தேவகோட்டை, மார்ச் 14: திண்டுக்கல் கல்லூரியில் தமிழக ஜூனியர் கைப்பந்து அணிக்கான போட்டி தேர்வு நடைபெற்றது. அதில் 91 மாணவர்கள் கலந்து கொண்டனர். இதில் தேவகோட்டை நகரத்தார் மேல்நிலைப்பள்ளி
12ம் வகுப்பு மாணவர் வீரமணிகண்டன் தேர்வு செய்யப்பட்டுள்ளார். தேசிய அளவிலான 46வது கைப்பந்து போட்டி வரும் மார்ச் 26ம் தேதி முதல் 30ம் தேதி வரை பீகார் மாநிலத்தில் உள்ள ஜெகனாபாத்தில் நடைபெற உள்ளது. தமிழ்நாடு அணி சார்பாக வீரமணிகண்டன் பங்கேற்கிறார். சிவகங்கை மாவட்டத்தில் இருந்து இம்மாணவர் மட்டுமே தேர்வு செய்யப்பட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
The post தேசிய கைப்பந்து போட்டிக்கு தேவகோட்டை மாணவர் தேர்வு appeared first on Dinakaran.
