மாருதி நகர் போலீஸ் ஸ்டேஷன்- ஓடிடி விமர்சனம்

கன்னடத்தில் 15க்கும் மேற்பட்ட படங்களை இயக்கிய தமிழரான தயாள் பத்மநாபன், தமிழில் ‘கொன்றால் பாவம்’ என்ற படத்துக்குப் பிறகு இயக்கியுள்ள படம் இது. ஆஹா தமிழ் ஓடிடி தளத்தில் வெளியாகியுள்ளது. மாருதி நகர் போலீஸ் ஸ்ேடஷனில் ஒருநாள் இரவு இன்ஸ்பெக்டர் அமித் பார்கவ்வைப் பார்க்க, அவரது நண்பரான தாதா சுப்பிரமணியம் சிவா வருகிறார். அப்போது காவல்நிலையத்தில் சப்-இன்ஸ்பெக்டர் வரலட்சுமி, அடிதடி வழக்கில் கைதான சந்தோஷ் பிரதாப், நாயைக் காணவில்லை என்று புகார் கொடுக்க வந்த ஒருவர், சந்தோஷ் பிரதாப்புடன் அடிதடியில் ஈடுபட்ட ஒருவர் மற்றும் சில போலீஸ்காரர்கள் அமர்ந்திருக்கின்றனர்.

சில விசாரணைக்கைதிகளும் இருக்கின்றனர். அப்ேபாது திடீரென்று மின்சாரம் சில நிமிடங்கள் தடைபடுகிறது. சுப்பிரமணியம் சிவாவும், அமித் பார்கவ்வும் துப்பாக்கியால் சுடப்படுகின்றனர். அவர்களை யார், எதற்காகச் சுட்டனர் என்பது மீதி கதை. போலீஸ் ஸ்டேஷனை மையமாக வைத்து கிரைம் திரில்லர் கதை சொல்ல முயற்சித்துள்ளார், தயாள் பத்மநாபன். திரைமொழிக்கான காட்சி அனுபவம் கிடைக்காததால், மேடை நாடகம் பார்த்த உணர்வு ஏற்படுகிறது. மொத்த படத்தையும் வரலட்சுமி தாங்கிப்பிடிக்கிறார். அவரது மெலிந்த தோற்றம் முதிர்ச்சியாகக் காட்டுவதால், போலீஸ் கேரக்டருக்கு அவர் பொருந்தவில்லை. போலீஸ் அதிகாரி ஆரவ் கம்பீரமாக நடித்துள்ளார். அவரும், மஹத் ராகவேந்திராவும் கதைக்குள் வரும்போது சற்று சூடுபிடிக்கிறது. கிளைமாக்ஸ் யூகிக்கக்கூடியதாக இருக்கிறது. இப்படத்தை ஒருமுறை பார்க்கலாம்.

The post மாருதி நகர் போலீஸ் ஸ்டேஷன்- ஓடிடி விமர்சனம் appeared first on Kollywood News | Kollywood Images - Cinema.dinakaran.com.

Related Stories: