தர்மபுரி, மார்ச் 13: தர்மபுரி மாவட்ட கலெக்டர் அலுவலகம் அருகே, தமிழ்நாடு ஊராட்சி செயலாளர்கள் சங்கம் சார்பில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி நேற்று ஆர்ப்பாட்டம் நடந்தது. மாவட்ட தலைவர் சரவணன் தலைமை வகித்தார். மாநில பொருளாளர் மகேஸ்வரன் முன்னிலை வகித்தார். மாநில செயற்குழு உறுப்பினர்கள் திருவருட்செல்வன், மாநில செயற்குழு உறுப்பினர் செந்தில், மாவட்ட செயலாளர் முருகன், பொருளாளர் சந்திரசேகரன் மற்றும் மாவட்ட ஒன்றிய நிர்வாகிகள் திரளாக கலந்து கொண்டனர்.
முறையான காலமுறை ஊதியம் பெற்று வரும் ஊராட்சி செயலாளர்களை, தமிழக அரசின் ஓய்வூதிய திட்டத்தில் இணைத்து, ஊராட்சி ஒன்றியங்களில் பணியாற்றும் பதிவரை எழுத்தாளர்களுக்கு உண்டான அரசின் சலுகைகளை ஊராட்சி செயலாளருக்கு விரிவுபடுத்தி அரசாணை வெளியிட வேண்டும் என ஆர்ப்பாட்டத்தில் வலியுறுத்தப்பட்டது.
The post தர்மபுரியில் ஊராட்சி செயலாளர்கள் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம் appeared first on Dinakaran.
