கடந்த டிசம்பர் 3ம்தேதி பாதிக்கப்பட்ட இடத்தையும், மக்களையும் சந்தித்து ஆறுதல் கூறி நிவாரண உதவிகள் வழங்க இருவேல்பட்டு கிராமத்திற்கு அமைச்சர் பொன்முடி, சென்றார். அவருடன் அப்போதைய கலெக்டர் பழனி, முன்னாள் எம்.பி பொன். கௌதமசிகாமணி, மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் மற்றும் அமைச்சரின் தனி பாதுகாப்பு பிரிவு சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் அருள்தாஸ் ஆகியோரும் சென்றிருந்தனர்.
அப்போது அமைச்சர் மற்றும் அதிகாரிகளை பெண் ஒருவர் அசிங்கமாக திட்டி, சேற்றை வாரி வீசி மிரட்டல் விடுத்ததாகவும், பணி செய்ய விடாமல் தடுத்ததாகவும் திருவெண்ணெய்நல்லூர் போலீசில் சிறப்பு சப் இன்ஸ்பெக்டர் அருள்தாஸ் புகார் அளித்தார். அதன்பேரில் இருவேல்பட்டு கிராமத்தை சேர்ந்த ராமகிருஷ்ணன், விஜயராணி ஆகிய இருவர் மீதும் காவல் உதவி ஆய்வாளர் பாலசிங்கம் வழக்கு பதிவு செய்து தேடி வந்தனர்.
பின்னர் கடந்த பிப்ரவரி 21ம் தேதி ராமர் (எ) ராமகிருஷ்ணனை விழுப்புரம் மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளரின் சிறப்பு படை கைது செய்தது. பாஜவை சேர்ந்த விஜயராணியை நேற்றிரவு திருவெண்ணெய்நல்லூர் போலீசார் கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.
The post திருவெண்ணெய்நல்லூர் அருகே அமைச்சர் மீது சேறு வீசிய பாஜ பெண் பிரமுகர் கைது appeared first on Dinakaran.
