திருவள்ளூர் புத்தகத் திருவிழாவில் இறையன்பு கருத்துரை நிகழ்ச்சி

திருவள்ளூர்: திருவள்ளூர் புத்தகத் திருவிழாவின் 4ம் நாள் நிகழ்ச்சியாக நேற்று சிந்தனை அரங்கத்தில் எழுத்தாளர் எஸ்.பாலபாரதியின் “பால்யத்தில் கதைகள்“ என்ற தலைப்பில் மாணவர்களுக்கான பயிற்சிப் பட்டறை என்ற நிகழ்ச்சியும், முன்னாள் தலைமைச் செயலாளர் வெ.இறையன்புவின் “மனப்பாடம் எனும் மாயை” என்ற தலைப்பில் கருத்துரையும், எழுத்தாளர் இமையத்தின் “தமிழ் இலக்கியத்தில் பெண்களின் பங்களிப்பு” என்ற தலைப்பில் கருத்துரை நிகழ்ச்சியும் நடைபெற்றது. இதில் ஆவடி மாநகராட்சி ஆணையர் ச.கந்தசாமி தலைமை தாங்கினார். முன்னதாக பள்ளி, கல்லூரி மாணவ, மாணவியர்கள் கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றது.

தினந்தோறும் சிந்தனை அரங்கத்தின் திருவள்ளூர் மாவட்ட எழுத்தாளர்களை கவுரவிக்கும் விதமாக எழுத்தாளர் சாந்தகுமாரி எத்துராசன் மாவட்ட நிர்வாகத்தின் சார்பாக கவுரவிக்கபட்டார். தொடர்ந்து சிறப்பு விருந்தினர்கள் எழுத்தாளர் எஸ்.பாலபாரதி, முன்னாள் தலைமைச் செயலாளர் வெ.இறையன்பு, எழுத்தாளர் இமையம் ஆகியோரை மாவட்ட நிர்வாகம் சார்பாக ஆவடி மாநகராட்சி ஆணையர் ச.கந்தசாமி சிறப்பு செய்தார். இதில் மாவட்ட வருவாய் அலுவலர் ராஜ்குமார், கலெக்டரின் கூடுதல் நேர்முக உதவியாளர் (நிலம்) செல்வமதி, உதவி ஆணையர் (கலால்) கணேசன், மாவட்ட வழங்கல் அலுவலர் கண்ணன், கலெக்டர் அலுவலக பொது மேலாளர் சங்கிலிரதி மற்றும் அரசு அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

The post திருவள்ளூர் புத்தகத் திருவிழாவில் இறையன்பு கருத்துரை நிகழ்ச்சி appeared first on Dinakaran.

Related Stories: