கொண்டையாவிற்கு சம்பளம் இல்லாமல் குப்பையில் இருந்து பொறுக்கும் பொருட்களை கடையில் போட்டு வாழ்வாதாரம் நடத்தி வந்துள்ளார். வாங்கிய பணத்தை கொடுத்த விட்டேன் என்று கூறிய கொண்டையாவிடம் ரூ.14 லட்சம் தர வேண்டும் என்று அவரது குடும்பத்தை மிரட்டி கடன் பத்திரத்தில் கையெழுத்து போட வைத்துள்ளார். இந்நிலையில், கொண்டையாவின் வங்கிக் கணக்கில், ஜிபிஎப் பணம் ரூ.3 லட்சம் வந்துள்ளது. இதுபற்றி முருகன் கொண்டையாவிடம் எந்த ஒரு தகவலும் சொல்லாமல் வங்கி கணக்கிலிருந்து எடுத்துள்ளார். தகவல் அறிந்த அவர், முருகனிடம் இதுபற்றி கேட்டபோது, உன்னையும் உன் குடும்பத்தையும் கொன்று விடுவேன் என மிரட்டி உள்ளார்.
இதனால் மனவேதனை அடைந்த கொண்டையா காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் அளித்தார். அதில், சுமார் 5 ஆண்டுகளாக கொண்டையாவின் சம்பள பணத்தை முழுமையாக முருகன் எடுத்துக்கொண்டதால், இதனால் தனது வாழ்வாதாரத்தை இழந்து தற்போது குப்பையில் இருந்து கிடைக்கும் பொருட்களை கடையில் போட்டு குடும்பம் நடத்தி வருகிறேன். தற்போது, ஜிபிஎப் பணம் ரூ.3 லட்சத்தையும் பறித்துக்கொண்டார், என என தெரிவித்து இருந்தார்.
புகாரின்பேரில், ஆர்கே நகர் போலீசார் வழக்குப்பதிவு செய்து, கொருக்குப்பேட்டையை சேர்ந்த முருகன் என்பவரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
The post மாநகராட்சி தூய்மைப்பணியாளரிடம் கந்து வட்டி கேட்டு மிரட்டி ரூ.3 லட்சம் பறித்தவர் கைது appeared first on Dinakaran.
