மகளிர் தின விழா கொண்டாட்டம்

 

உத்திரமேரூர்: உத்திரமேரூர் அடுத்த பாரதிபுரம் கிராமத்தில் உலக மகளிர் தினம் நேற்று கொண்டாடப்பட்டது. ஒன்றிய கவுன்சிலர் கலைச்செல்வி உமாபதி தலைமை தாங்கினார். ஊராட்சி மன்ற தலைவர் சாந்தி, தன்னார்வலர்கள் நாராயணமூர்த்தி, பழனி, தமிழ்ச்செல்வி ஆகியோர் முன்னிலை வகித்தனர். சர்வோ ட்ரஸ்ட் நிர்வாகி கலைச்செல்வி வரவேற்றார். நிகழ்ச்சியில் பள்ளி சிறார்களின் கலை நிகழ்ச்சிகள் நடந்தன.

தொடர்ந்து மகளிர் சுய உதவிக்குழு பெண்களுக்கு மகளிரின் உரிமைகள், கடமைகள் மற்றும் மரம் வளர்ப்பது, இயற்கையை பாதுகாப்பது பற்றி விளக்கமளிக்கப்பட்டது. பின்னர் சிறந்த மகளிர் குழு பெண்களுக்கும் கலை நிகழ்ச்சிகளில் பங்கேற்ற சிறார்களுக்கும் பரிசுகள் வழங்கப்பட்டது. நிகழ்ச்சியில் பள்ளி தலைமை ஆசிரியை ரேவதி, மகளிர் சுய உதவிக் குழு பெண்கள் உட்பட பலர் கல்ந்துகொண்டனர்.
குன்றத்தூர்: மகளிர் தினத்தை முன்னிட்டு, பெண்களை கவுரவிக்கும் வகையில் மாங்காடு நகராட்சி அலுவலகத்தில் உலக மகளிர் தின விழா நேற்று முன்தினம் சிறப்பாக கொண்டாடப்பட்டது.

நகர்மன்ற தலைவர் சுமதி முருகன், துணை தலைவர் ஜபருல்லா ஆகியோர் தலைமை தாங்கினர். நகராட்சி ஆணையர் நந்தினி முன்னிலை வகித்தார். மகளிரின் சாதனைகளை போற்றும் வகையில், பெண்கள் முன்னிலையில் கேக் வெட்டி உலக மகளிர் தின விழா கொண்டாடப்பட்டது.

தொடர்ந்து, பெண்களுக்கான வினாடி – வினா, கவிதை, கட்டுரை எழுதுதல் ஆகிய போட்டிகள் நடத்தப்பட்டு வெற்றிபெற்ற பெண்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டது. இந்நிகழ்ச்சியில் நகர் மன்ற உறுப்பினர்கள், நகராட்சி அலுவலர்கள், பணியாளர்கள் என 75க்கும் மேற்பட்டோர் கலந்துகொண்டனர். விழாவிற்கான ஏற்பாடுகளை மாங்காடு நகராட்சி சார்பில் மேற்கொள்ளப்பட்டது.

 

The post மகளிர் தின விழா கொண்டாட்டம் appeared first on Dinakaran.

Related Stories: