இந்நிலையில், நாகபட்டினம் செல்லும் TN-01-AM-1936 என்கிற பதிவுஎண் கொண்ட அரசு விரைவு பேருந்தில், திண்டிவனம் பகுதிக்கு செல்லக்கூடிய 2 பயணிகள் ஏறியுள்ளனர். அப்போது அவர்களிடம், திண்டிவனத்தில் பேருந்து நிற்காது எனக்கூறி நடத்துனர் ஒருமையில் பேசி உள்ளார். இதனால் 2 பயணிகளும், நடத்துனரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதில், ஆத்திரமடைந்த நடத்துனர், பேருந்தை நிறுத்தி அவர்களை தரக்குறைவாக பேசி சட்டையை பிடித்து இழுத்தும், கழுத்தைப்பிடித்து அவர்களை கீழே இறக்கியும் அராஜகத்தில் ஈடுபட்டுள்ளார்.
பின்னர், பேருந்து நிறுத்தாமல் புறப்பட்டு சென்றுள்ளார். இதில், பேருந்தில் இருந்து இறங்கிய 2 பயணிகளும், செய்வதறியாமல் திகைத்து உள்ளனர். பயணிகளை தரக்குறைவாக பேசி அத்துமீறி கழுத்தை பிடித்தும், சட்டையை இழுத்தும் பேருந்தில் இருந்து இறக்கி கீழே தள்ளிய அரசு விரைவு பேருந்து நடத்துனரின், அடாவடி செயல் காஞ்சிபுரம் பேருந்து நிலையத்தில் இருந்த பொதுமக்களிடையே முகசுளிப்பை ஏற்படுத்தியது.
The post அரசு விரைவு பேருந்தில் ஏறிய பயணிகளிடம், நடத்துனர் வாக்குவாதம்: காஞ்சிபுரத்தில் பரபரப்பு appeared first on Dinakaran.
