தஞ்சாவூர், மார்ச்10: தஞ்சையில் மோட்டார் சைக்கிள்கள் திருடியவர் கைது செய்யப்பட்டார். அவரிடம் இருந்து ரூ.6 லட்சம் மதிப்புள்ள வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டன. தஞ்சை மருத்துவக்கல்லூரி போலீஸ் நிலையத்துக்குட்பட்ட மருத்துவக்கல்லூரி மருத்துவமனை, புதிய பஸ் நிலையம், தஞ்சை மேற்கு போலீஸ் நிலையத்துக்குட்பட்ட பழைய பஸ் நிலையம் மற்றும் தஞ்சை தெற்கு, தமிழ்ப்பல்கலைக்கழக போலீஸ் நிலைய பகுதிகளில் மோட்டார் சைக்கிள்கள் அடிக்கடி திருடு போயின. இது தொடர்பாக போலீசில் பல்ேவறு புகார்கள் அளிக்கப்பட்டன.
புகார்கள் குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து மோட்டார் சைக்கிள் திருடனை தேடி வந்தனர். இந்த நிலையில் தஞ்சை மருத்துவக்கல்லூரி போலீஸ் இன்ஸ்பெக்டர் சந்திரா மற்றும் போலீசார் கண்காணிப்பு கேமராக்களில் பதிவான காட்சிகளில் அடிப்படையில் விசாரணை நடத்தி வந்தனர். இதில் சந்தேப்படும் படியான ஒரு நபர், பல்வேறு இடங்களில் திருட்டு போன பகுதிகளில் சுற்றித் திரிந்தது தெரிய வந்தது.
கண்காணிப்பு கேமராவில் பதிவான நபர் தஞ்சை மருத்துவக்கல்லூரி சாலையில் உள்ள தமிழ்நகரை சேர்ந்த ராஜேந்திரன் மகன் தமிழரசன்(32) என்பது தெரிய வந்தது. இதையடுத்து அவரை பிடித்து விசாரணை நடத்திய போது அவர் மோட்டார் சைக்கிள் திருடியது தெரிய வந்தது. இதையடுத்து போலீசார், தமிழரசனை கைது செய்து அவரிடம் இருந்து 8 மோட்டார்சைக்கிள்களை பறிமுதல் செய்தனர். பறிமுதல் செய்யப்பட்ட மோட்டார்சைக்கிள்களின் மதிப்பு ரூ.6 லட்சம் ஆகும்.
The post தஞ்சாவூரில் பலே பைக் திருடன் கைது: ₹6லட்சம் மதிப்புள்ள பைக்குகள் பறிமுதல் appeared first on Dinakaran.
