புழல்: புழல் விசாரணை சிறையில் 3,500க்கும் மேற்பட்ட கைதிகள் உள்ளனர். இவர்களிடம் தடை செய்யப்பட்ட செல்போன், கஞ்சா மற்றும் போதைப் பொருட்கள் நடமாடுவதாக புகார் வந்தது. அதன்பேரில், அவ்வப்போது சோதனைகள் செய்து, கைதிகளிடம் இருந்து செல்போன் மற்றும் கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டு வருகின்றன.
இந்தநிலையில் நேற்று முன்தினம் விசாரணை சிறையில் சுற்றுச்சுவர் அருகில் பந்து வடிவிலான ஒரு பொருளை புதுக்கோட்டை கோபாலபுரம் பகுதியைச் சேர்ந்த மாதவன் என்ற லேடி மாதவன் (24) வைத்திருந்தார். அதனை எடுத்துக்கொண்டு அறைக்குள் சென்றதைப் பார்த்த சிறை காவலர் சந்தேகமடைந்து அந்த பொருளை பிரித்துப் பார்த்தபோது அதில் 100 கிராம் கஞ்சா, 2 பீடி கட்டுகள், 10 சிகரெட், லைட்டர் ஆகியவை இருந்தது.
சென்னை ஓட்டேரியைச் சேர்ந்த உதயா (எ) அப்பு உதயா (24) என்பவர் பெரியமேடு காவல் நிலையத்தில் அடிதடி வழக்கில் கைது செய்யப்பட்டு சிறையில் உள்ளார். அவர் எடுத்துவரச் சொன்னதாக விசாரணையில் தெரியவந்தது. அதன்பேரில் புழல் விசாரணை சிறை சார்பில் புழல் போலீசில் புகார் தெரிவிக்கப்பட்டது. போலீசார் கைதிகள் இருவர் மீது வழக்குப்பதிவு செய்து பல்வேறு கோணங்களில் விசாரித்து வருகின்றனர்.
The post சிறை கைதியிடம் கஞ்சா பறிமுதல் appeared first on Dinakaran.
