தொடர்ந்து ஆங் சான் சூகி, அதிபர் வின் மைன்ட் உள்ளிட்ட தலைவர்களையும் ராணுவம் கைது செய்து சிறையில் வைத்துள்ளது. ராணுவம் ஆட்சியை கைப்பற்றியது முதலே அதற்கு எதிர்ப்பு தெரிவித்து போராடி வரும் மக்கள், பொதுதேர்தலை நடத்த வேண்டும் என வலியுறுத்தி வருகின்றனர்.
இந்நிலையில் மியான்மரில் 4 ஆண்டுகளுக்கு பிறகு விரைவில் பொதுதேர்தல் நடைபெறும் என ராணுவம் தெரிவித்துள்ளது. இதுதொடர்பாக ராணுவ அரசின் தலைவர் ஜெனரல் மின் ஆவுங் ஹ்லைங் செய்தியாளர்களிடம் கூறுகையில், “மியான்மரில் இந்தாண்டு டிசம்பர் அல்லது 2026 ஜனவரி மாதம் பொதுதேர்தல் நடத்தப்படும். இந்த தேர்தலில் போட்டியிட ஏற்கனவே தற்போதுவரை 53 அரசியல் கட்சிகள் விருப்பம் தெரிவித்துள்ளன” என்றார். ஆனால் தேர்தல் நடைபெறும் தேதிகள் குறித்த அறிவிப்பு எதுவும் வௌியாகவில்லை.
The post 4 ஆண்டுகளுக்கு பிறகு மியான்மரில் விரைவில் பொதுத்தேர்தல்: ராணுவம் அறிவிப்பு appeared first on Dinakaran.
