கொள்ளிடம் அருகே நெற்பயிர்கள் பதராகிப் போனது கண்டு விவசாயிகள் அதிர்ச்சி

 

கொள்ளிடம் மார்ச் 8: மயிலாடுதுறை மாவட்டம் கொள்ளிடம் அருகே கண்ணபிராண்டி கிராமத்தில் சாகுபடி செய்திருந்த நெற் பயிர்கள் பதராய் போனதை கண்டு விவசாயி அதிர்ச்சி அடைந்துள்ளனர். மயிலாடுதுறை மாவட்டம் கொள்ளிடம் அருகே மாதாணம் ஊராட்சி சேர்ந்த கண்ணபிரான் கிராமத்தில் முருகன் என்ற விவசாயி 19 ஏக்கர் நிலப்பரப்பில் சம்பா நெருப்பை சாகுபடி செய்திருந்தார். நெற்பயிர் அறுவடைக்கு தயாரான நிலையில் கதிர் அறுக்கும் இயந்திரம் வைத்து அறுவடை செய்தார். அறுவடை செய்த நெற்பயிர்களை டிராக்டர் மூலம் மாதானத்தில் உள்ள தனது வீட்டிற்கு எடுத்துச் சென்றார். அங்கு பார்த்த போது நெல்மணிகள் காய்ந்து போய் பதராகி உள்ளதை கண்டு அதிர்ச்சி அடைந்துள்ளார். இது குறித்து விவசாயி முருகன் வேளாண் துறை அதிகாரிகளுக்கும், விவசாய சங்க தலைவருக்கும் தகவல் தெரிவித்தார்.

என்ன காரணத்தால் பதறாகி போனது என்று தெரியாமல் மன உளைச்சலுக்கு ஆளாகியுள்ளார். ஏக்கருக்கு ரூ.25,000 முதல் 30,000 வரை செலவு செய்து நேரடி நெல் விதைப்பில் ஈடுபட்ட விவசாய முருகன் செலவு செய்த முதலீடு கூட கிடைக்கவில்லையே என்ற வேதனையில் விவசாயி முருகன் இருந்து வருகிறார். இதனை அறிந்த மாவட்ட விவசாய சங்க தலைவர் வெட்டாத்தங்கரை விஸ்வநாதன், மற்றும் நிர்வாகிகள் விவசாயிகள் மாதானத்திற்கு சென்று பதறான நெல்லை பார்வையிட்டு ஆய்வு செய்தனர். பின்னர் இது குறித்து கொள்ளிடம் வட்டார வேளாண் உதவி இயக்குனர் மற்றும் சம்பந்தப்பட்ட அதிகாரிகளை தொடர்பு கொண்டு பாதிப்படைந்த நெற்பயிற் குரிய நிவாரணம் வழங்குமாறும் அதிகாரிகளிடம் கேட்டுக்கொண்டனர். விவசாயி ஒருவரின் சாகுபடி முற்றிலும் பதராகி போய் உள்ளது அப்பகுதி விவசாயிகளிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

 

The post கொள்ளிடம் அருகே நெற்பயிர்கள் பதராகிப் போனது கண்டு விவசாயிகள் அதிர்ச்சி appeared first on Dinakaran.

Related Stories: