மதுரை அமெரிக்கன் கல்லூரியில் கடல் பாசிகள் கண்காட்சி

மதுரை, மார்ச் 8: மதுரை அமெரிக்கன் கல்லூரியின் நுண்ணியிரியல் துறை மற்றும் தமிழ்நாடு அறிவியல் தொழில்நுட்ப மாநில மன்றம் இணைந்து கடல் பாசிகள் கண்காட்சியை மதுரையில் நடத்தியது. இக்கண்காட்சிக்கு முதுகலை நுண்ணியிரியல் துறையின் தலைவர் ஜோசப் ததேயஸ் தலைமை வகித்தார். கல்லூரி முதல்வர் மற்றும் செயலருமான முனைவர் தவமணி கிறிஸ்டோபர் தொடங்கி வைத்தார்.

கல்லூரியின் நிதி காப்பாளர் பியூலா ரூபி கமலம், இளங்கலை நுண்ணியிரியல் துறை தலைவர் முனைவர் ஆன்ட்ரூ பிரதீப், நிகழ்ச்சி ஒருங்கிணைப்பாளர் இம்மானுவேல் சுரேஷ், நுண்ணியிரியல் துறையின் பேராசிரியர்கள் மற்றும் மாணவர்கள் கலந்து கொண்டனர்.

இதில் 40 வகையான கடல் பாசிகள் காட்சிக்கு வைக்கபட்டு இருந்தன. கடல் பாசிகளின் நீண்ட நாள் சேமிப்பு, வணிக பயன்பாடுகள் மற்றும் சாகுபடி உள்ளிட்டவை குறித்து ராஜேந்திர குமார், ராமநாதபுரத்தைச் சேர்ந்த தனியார் ப்ராஜெக்ட் நிர்வாகத்தனர் விளக்கினார். இந்த கண்காட்சியின் மூலம் கல்லூரிகளின் அறிவியல் துறை மாணவர்கள் மற்றும் பள்ளி மாணவர்கள் பலன் அடைந்தனர்.

The post மதுரை அமெரிக்கன் கல்லூரியில் கடல் பாசிகள் கண்காட்சி appeared first on Dinakaran.

Related Stories: