கரூர், மார்ச். 5: கரூர் கலெக்டர் அலுவலகம் அருகே கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு அங்கன்வாடி ஊழியர் மற்றும் உதவியாளர் சங்கம் சார்பில் மாலை நேர ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. கரூர் மாவட்ட கலெக்டர் அலுவலகம் அருகே நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்துக்கு மாவட்ட தலைவர் பத்மாவதி தலைமை வகித்தார். மாவட்ட செயலாளர் சாந்தி துவக்கவுரையாற்றினார். சிஐடியூ மாவட்ட நிர்வாகி ஜீவானந்தம், அரசு ஊழியர் சங்க மாவட்ட செயலாளர் பொன் ஜெயராம், சிஐடியூ மாவட்ட நிர்வாகி சுப்ரமணியன், உட்பட அனைத்து நிர்வாகிகளும் கலந்து கொண்டு பேசினர்.
மே மாதம் வழங்கப்படும் கோடை விடுமுறையை அங்கன்வாடி மையங்களுக்கு ஒரு மாதமாக வழங்கிட வேண்டும். 93ம் ஆண்டு பணியில் சேர்ந்த அங்கன்வாடி ஊழியர்களுக்கு மேற்பார்வையாளர் நிலை 2 பதவி உயர்வை வழங்க வேண்டும். அங்கன்வாடி மையத்திற்கு வரும் முன்பருவ கல்வி குழந்தைகளுக்கு முகப்பதிவு போட்டோ எடுத்து கட்டாயம் போட வேண்டும் என்ற திட்டத்தை கைவிட வேண்டும் என்பன போன்ற பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி மாலை நேர ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
The post கரூரில் தமிழ்நாடு அங்கன்வாடி ஊழியர், உதவியாளர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம் appeared first on Dinakaran.
