பூந்தமல்லி, மார்ச் 4: கோயம்பேடு மார்க்கெட்டுக்கு நேற்று காலை 800 வாகனங்களில் 9000 டன் காய்கறிகள் வந்து குவிந்துள்ளதால் அனைத்து காய்கறிகளின் விலை குறைந்து காணப்பட்டது. அதன்படி, ஒரு கிலோ வெங்காயம், பீன்ஸ், வெண்டைக்காய், பாகற்காய் ₹30க்கும், சின்ன வெங்காயம் ₹40க்கும் தக்காளி ₹15க்கும், உருளை கிழங்கு, சுரைக்காய், நூக்கல் ஆகியவை ₹20க்கும் விற்பனை செய்யப்பட்டது. கேரட், பீர்க்கங்காய் 35க்கும் பீட்ரூட், வெள்ளரிக்காய், பச்சை மிளகாய், அவரைக்காய், கோவைக்காய் 25 க்கும் சவ்சவ் ₹10க்கும், முட்டைகோஸ் ₹5க்கும், காராமணி மற்றும் பட்டாணி, எலுமிச்சை ₹20க்கும், சேனைக் கிழங்கு, முருங்கைக்காய் ₹60க்கும் விற்பனையானது. பூண்டு ஒரு கிலோ ₹150ல் இருந்து குறைந்து ₹90க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது. இதேபோல், ஒரு கிலோ இஞ்சி ₹300ல் இருந்து ₹60ஆக குறைந்துள்ளது.
The post கோயம்பேடு மார்க்கெட்டில் காய்கறிகள் விலை சரிவு appeared first on Dinakaran.
