திருமணம் செய்வதாக உல்லாசம் ஆபாசமாக வீடியோ எடுத்து இளம்பெண்ணுக்கு மிரட்டல்: லிவிங் டு கெதர் காதலன் கைது

போரூர், டிச.23: திருமணம் செய்யாமல் 8 மாதம் ஒன்றாக குடும்பம் நடத்திய போது, இளம் பெண்ணுக்கு தெரியாமல் ஒன்றாக இருந்ததை வீடியோ எடுத்து மிரட்டிய லிவிங் டு கெதர் காதலனை போலீசார் கைது செய்தனர்.
சென்னை சாலிகிராம் பகுதியை சேர்ந்த 25 வயது இளம்பெண் ஒருவர் விருகம்பாக்கம் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் ஒன்று அளித்தார். அதில், திருவேற்காடு விநாயகர் நகரை சேர்ந்த சிராஜூல் இஸ்லாம் (எ) குஞ்சன் சிங் (25) என்பவரை நான் காதலித்து வந்தேன். சிராஜூல் இஸ்லாம், கார்களுக்கு ஸ்டிக்கர் ஒட்டும் வேலை செய்து வருகிறார். நாங்கள் இருவரும் விரைவில் திருமணம் செய்து கொள்ளலாம் என்று முடிவு செய்து இருந்தோம். இதனால் நான் எனது வீட்டைவிட்டு வெளியேறி, சிராஜூல் இஸ்லாமுடன், கடந்த 8 மாதங்களாக சாலிகிராமத்தில் ஒரு வீட்டை வாடகைக்கு எடுத்து ஒன்றாக கணவன் மனைவி போல் வாழ்ந்து வந்தோம்.

அப்போது சிராஜூல் இஸ்லாம் நடவடிக்கை சரியில்லாததால் நான் அவரை பிரிந்து தற்போது தனியாக வசித்து வருகிறேன். இதற்கிடையே சிராஜூல் இஸ்லாம், 8 மாதம் ஒன்றாக இருந்த போது, நாங்கள் இருவரும் உல்லாசமாக இருந்தை, எனக்கு தெரியாமல் ரகசியமாக வீடியோ எடுத்துள்ளார். அந்த வீடியோவை தற்போது எனக்கு அனுப்பி வைத்து, நான் அழைக்கும் போதெல்லாம் உல்லாசமாக இருக்க வர வேண்டும். இல்லையென்றால் இந்த வீடியோக்களை சமூக வலைதளங்களில் வெளியிடுவேன், என்று மிரட்டுகிறார். அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு தெரிவித்து இருந்தார். அந்த புகாரின் படி மகளிர் போலீசார் விசாரணை நடத்திய போது, சிராஜூல் இஸ்லாம் இளம்பெண்ணை திருமணம் செய்வதாக கூறி ஒன்றாக குடும்பம் நடத்தி அதை வீடியோ எடுத்து மிரட்டி வந்தது உறுதியானது. அதைதொடர்ந்து, பெண்கள் வன்கொடுமை தடுப்பு சட்டம் உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்து நேற்று சிராஜ்ூல் இஸ்லாமை கைது செய்தனர். அவரிடம் இருந்து இளம் பெண்ணுடன் ஒன்றாக இருந்த ஆபாச வீடியோக்கள் அடங்கிய செல்போனை போலீசார் பறிமுதல் செய்தனர்.

Related Stories: