ஈரோடு: வன்முறையை தூண்டும் வகையில் பேசிய வழக்கில் சீமானுக்கு சம்மன் வழங்க 3வது நாளாக ஈரோடு போலீசார் முகாமிட்டுள்ளது. ஈரோடு கிழக்கு தொகுதி தேர்தல் பரப்புரையில் வெடிகுண்டு வீசுவேன் என வன்முறையை தூண்டும் வகையில் சீமான் பேசியதாக புகார் அளிக்கப்பட்டது. வன்முறையை தூண்டும் வகையில் பேசியதாக சீமான் மீது ஈரோடு கருங்கல்பாளையம் போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளது.