கட்சி உரிமை தொடர்பாக அன்புமணிக்கு எதிராக ராமதாஸ் தொடர்ந்த வழக்கு விசாரணைக்கு இடைக்காலத் தடை

 

சென்னை: கட்சி உரிமை தொடர்பாக அன்புமணிக்கு எதிராக ராமதாஸ் தொடர்ந்த வழக்கு விசாரணைக்கு இடைக்காலத் தடை விதிக்கப்பட்டுள்ளது. கட்சி பெயர், சின்னம் பயன்படுத்துவதை எதிர்த்து அன்புமணிக்கு எதிராக சிட்டி சிவில் நீதிமன்றத்தில் ராமதாஸ் வழக்கு தொடர்ந்தார். அன்புமணி தரப்புக்கு சின்னம் ஒதுக்கிய தேர்தல் ஆணைய உத்தரவை ரத்து செய்யவும் ராமதாஸ் தரப்பு கோரியிருந்தது. வழக்கில் தன்னை இணைக்கக் கோரிய வடிவேல் ராவணன் மனுவை உரிமையியல் நீதிமன்றம் நிராகரித்து இருந்தது. ராமதாஸ் தொடர்ந்த வழக்கை நிராகரிக்க கோரி அன்புமணி தாக்கல் செய்த மனு மீது மட்டுமே வாதங்களை வைக்க அனுமதிக்க முடியும் எனக்கூறி, நிராகரிக்க கோரி மனு மீது மட்டும் இரு தரப்பு வாதங்களை வைப்பதற்காக வழக்கின் விசாரணையை நாளை சென்னை உரிமையியல் நீதிமன்றம் தள்ளி வைத்திருந்தது.

உரிமையியல் நீதிமன்றம் நிராகரித்ததை எதிர்த்து வடிவேல் ராவணன் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். இந்நிலையில் இந்த வழக்கு இன்று நீதிபதி டி.வி. தமிழ்செல்வி அமர்வில் விசாரணைக்கு வந்தது. அப்போது; மனு தொடர்பாக பதில் மனு தாக்கல் செய்ய ராமதாசுக்கு உத்தரவிட்டதுடன் வழக்கிற்கும் இடைக்கால தடை விதித்து உத்தரவிட்டார். மேலும் விசாரணை ஏப்ரல் 10 தள்ளி வைத்தும் நீதிபதி உத்தரவிட்டார்.

Related Stories: