காந்திநகர் போலீஸ் இன்ஸ்பெக்டர் தலைமையில் விசாரணை நடைபெற்று வந்தது. இந்நிலையில் தன்னுடைய புகாரில் கூடுதல் விசாரணை நடத்த வேண்டும் என்று கூறி கடந்த சில தினங்களுக்கு முன் அந்த இளம்பெண் மீண்டும் காவல் நிலையத்திற்கு சென்றார். அப்போது பிஜு என்ற சப்-இன்ஸ்பெக்டர் காவல் நிலையத்தில் இருந்தார். வழக்கில் தொடர் விசாரணை நடத்த வேண்டுமா? அப்போ எனக்கு ஒரு மதுபாட்டில் வாங்கிட்டு வா! என இளம்பெண்ணிடம் சப்-இன்ஸ்பெக்டர் பிஜு கூறியுள்ளார்.
இதைக்கேட்டு முதலில் அதிர்ச்சியடைந்த இளம்பெண் பின்னர் மதுபான கடைக்கு சென்று மதுபாட்டில் வாங்கினார். அதனை பெற்றுக்கொண்ட சப்-இன்ஸ்பெக்டர் பிஜு, நைசாக இளம்பெண்ணிடம் பேச்சு கொடுத்து தன்னுடன் தனிமையில் இருக்க வேண்டும் என்று வற்புறுத்தியதாக கூறப்படுகிறது.
இதுகுறித்து இளம்பெண் கோட்டயம் லஞ்ச ஒழிப்புத்துறை போலீசில் புகார் தெரிவித்தார். லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார், சப்-இன்ஸ்பெக்டர் பிஜுவை கையும் களவுமாக பிடிக்க திட்டமிட்டனர். இதனால் நேற்று இளம்பெண்ணை, சப்-இன்ஸ்பெக்டர் பிஜுவிடம் ஆசையாக பேச வைத்து அங்குள்ள ஒரு ஓட்டலுக்கு வரவழைத்தனர். ஓட்டலுக்கு சென்ற சப்-இன்ஸ்பெக்டர் பிஜுவை ஏற்கனவே அங்கு மறைந்திருந்த லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் மடக்கிப்பிடித்து கைது செய்தனர்.
The post புகாரை விசாரிக்க உல்லாசத்துக்கு அழைத்த சப்-இன்ஸ்பெக்டர் கைது: நைசாக பேசி போலீசில் சிக்க வைத்த இளம்பெண் appeared first on Dinakaran.
