எனினும் அவர் போலீசில் சிக்காமல், தொடர்ந்து தலைமறைவாகவே இருந்து வந்தார். இதற்கிடையே வெளிநாட்டுக்கு நாகார்ஜூனா தப்பி செல்ல முயற்சிப்பதாக இந்தூர் போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதைத் தொடர்ந்து, அவரை தேடப்படும் தலைமறைவு குற்றவாளியாக இந்தூர் மாநகர காவல்துறை ஆணையர் அறிவித்தார். அதோடு, அனைத்து சர்வதேச விமான நிலையங்களிலும் எல்ஓசி போடப்பட்டது.
இந்நிலையில், சென்னை விமானநிலையத்தில் நேற்று அதிகாலை துபாய் செல்லும் எமிரேட்ஸ் விமானம் தயார் நிலையில் இருந்தது. அதில் செல்ல வேண்டிய பயணிகளின் பாஸ்போர்ட் மற்றும் ஆவணங்களை விமான நிலைய குடியுரிமை அதிகாரிகள் பரிசோதித்து, அவர்களை விமானத்துக்கு அனுப்பி கொண்டிருந்தனர். இதில் துபாய் செல்வதற்காக வந்திருந்த ஒரு பயணியின் பாஸ்போர்ட், ஆவணங்களை கம்ப்யூட்டரில் வைத்து சோதனை செய்தனர்.
அவர், மத்திய பிரதேச போலீசாரால் தேடப்பட்டு வரும் தலைமறைவு குற்றவாளி நாகார்ஜூனா ரெட்டி என விமான நிலைய குடியுரிமை அதிகாரிகளுக்கு தெரியவந்தது. இதைத் தொடர்ந்து நாகார்ஜூனா ரெட்டியின் துபாய் பயணத்தை ரத்து செய்து, அவரை மடக்கி பிடித்து, ஒரு தனியறையில் குடியுரிமை அதிகாரிகள் அடைத்து வைத்தனர்.
இதுகுறித்து இந்தூர் மாநகர காவல் ஆணையருக்கும் தகவல் தெரிவித்தனர். பின்னர், துபாய்க்கு தப்பி செல்ல முயன்ற நாகார்ஜூன ரெட்யை விமானநிலைய போலீசாரிடம் ஒப்படைத்தனர். அவரை விமானநிலைய போலீசார் கைது செய்து, காவலில் வைத்து விசாரித்து வருகின்றனர். அவரை இந்தூர் கொண்டு செல்வதற்காக மத்தியப் பிரதேச தனிப்படை போலீசார் சென்னைக்கு வந்து கொண்டிருக்கின்றனர். அவர்கள் வந்ததும் நாகார்ஜூன ரெட்டியை போலீசார் ஒப்படைக்கின்றனர். இதனால் அங்கு பரபரப்பு நிலவியது.
The post பல்வேறு வழக்குகளில் தேடப்பட்டவர் துபாய்க்கு தப்பி செல்ல முயன்ற குற்றவாளி சென்னையில் கைது appeared first on Dinakaran.
