வக்பு திருத்தச் சட்டத்தை திரும்ப பெறக்கோரி ஆர்ப்பாட்டம்

 

ஈரோடு,பிப்.28: ஒன்றிய அரசின் வக்பு திருத்தச் சட்டங்களை திரும்ப பெறக் கோரி, ஈரோடு கருங்கல்பாளையத்தில், மனிதநேய மக்கள் கட்சியின் சார்பில் நேற்று ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்த்திற்கு, அக்கட்சியின் மாவட்ட தலைவர் சித்திக் தலைமை வகித்தார். மாவட்ட செயலாளர் சலீம் வரவேற்றார். இதில், சிறுபான்மை இசுலாமியர்களுக்கு அளித்துள்ள பல உரிமைகளை பறிக்கும் வகையிலும், இந்தியாவில் வாழும் இசுலாமியர்களை பாரபட்சமாக கருதும் வகையிலும், வக்ப் திருத்தச் சட்டம் 2024 கொண்டு வரப் பட்டதாக குற்றம் சாட்டப்பட்டது.

மேலும், வக்ப் சொத்துக்களை ஆக்கிரமிக்கும் செய்யும் வகையில், அச்சட்டத்திருத்தம் கொண்டு வரப்பட்டதாகவும், வக்ப் திருத்தச் சட்டத்தை திரும்ப பெறக் கோரியும்,ஒன்றிய அரசைக் கண்டித்தும், ஆர்ப்பாட்டத்தில் கோஷம் எழுப்பினர்.ஆர்ப்பாட்டத்தில், மாநகர திமுக செயலாளர் சுப்பிரமணியம்,விசிக மாவட்ட செயலாளர் சாதிக் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

The post வக்பு திருத்தச் சட்டத்தை திரும்ப பெறக்கோரி ஆர்ப்பாட்டம் appeared first on Dinakaran.

Related Stories: