மதுராந்தகம், பிப்.27: காஞ்சிபுரம் தெற்கு மாவட்டம் சாலவாக்கத்தில் இன்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் 72வது பிறந்தநாள் விழாவை முன்னிட்டு 72 கிலோ கேக் வெட்டி உற்சாகமாக கொண்டாடப்படவுள்ளது. இதில், காஞ்சிபுரம் தெற்கு மாவட்ட செயலாளர் சுந்தர் எம்எல்ஏ பங்கேற்க உள்ளார். காஞ்சிபுரம் தெற்கு மாவட்டம், சாலவாக்கம் ஒன்றிய திமுக சார்பில், தமிழ்நாடு முதலமைச்சரும் திமுக கட்சி தலைவருமான மு.க.ஸ்டாலின் 72வது பிறந்தநாள் விழாவையொட்டி 72 கழக மூத்த முன்னோடி தம்பதிகளுக்கு புத்தாடைகள் வழங்கப்பட்டு மேள தாளங்கள் முழங்க ஊர்வலமாக அழைத்து வந்து சாலவாக்கம் பேருந்து நிலையம் அருகில் காஞ்சிபுரம் தெற்கு மாவட்ட செயலாளர் க.சுந்தர் எம்எல்ஏ தலைமையிலும் ஒன்றிய செயலாளர் குமார் ஏற்பாட்டில் 72 கழக முன்னோடிகள் தனித்தனியாக 72 கிலோ எடை கொண்ட கேக் வெட்டி முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பிறந்தநாள் விழா இன்று காலை கொண்டாடப்பட உள்ளது. இந்நிகழ்ச்சியில், ஒன்றிய நிர்வாகிகள் கலந்து கொள்ள உள்ளனர்.
மேலும், சாலவாக்கம் அருகே உள்ள திருமுக்கூடல் கிராமத்தில் இன்று மாலை 5 மணி அளவில் 1072 பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவி வழங்கும் நிகழ்ச்சி மற்றும் பிறந்தநாள் விழா பொதுக்கூட்டம் நடைபெற உள்ளது. இந்த நிகழ்ச்சிக்கு, காஞ்சிபுரம் தெற்கு ஒன்றிய செயலாளர் குமார் தலைமை தாங்குகிறார். கிளைச் செயலாளர் உதயா அனைவரும் வரவேற்க உள்ளார். துணைத் தலைவர் சீனிவாசன் நன்றி கூற உள்ளார். காஞ்சிபுரம் தெற்கு மாவட்ட செயலாளர் க.சுந்தர் எம்எல்ஏ, காஞ்சிபுரம் எம்பி ஜி.செல்வம், தலைமை கழக பேச்சாளர் கந்திலி கரிகாலன் உள்ளிட்டோர் கலந்து கொண்டு சிறப்புரையாற்றுகின்றனர். இந்த நிகழ்ச்சியில், நிர்வாகிகள் ஊராட்சி மன்ற தலைவர் மஞ்சுளா முருகன், சிவராமன், வெங்கடேசன், ரவி, ஞானசேகரன், சுஜாதா, பாலமுருகன் வெங்கடசுப்பிரமணி, பாண்டியன், பாபஷெரிப் மற்றும் உள்ளாட்சி பிரதிநிதிகள் உள்ளிட்டோர் கலந்து கொள்ள உள்ளனர்.
The post முதலமைச்சரின் 72வது பிறந்தநாள் விழாவை முன்னிட்டு 72 கிலோ கேக் வெட்டி இன்று கொண்டாட்டம்: மாவட்ட செயலாளர் சுந்தர் எம்எல்ஏ பங்கேற்கிறார் appeared first on Dinakaran.
