நாட்டு பசு மாடுகள் பராமரிப்பு விழிப்புணர்வு

 

மண்டபம்,பிப்.26: மண்டபம் அருகே அரியமான் பீச் பகுதியில் அமைந்துள்ள மீனாட்சி பீடம் ஆலயத்தில் கோகுலம் நாட்டு மாடுகள் பராமரிப்பு மற்றும் பயன் குறித்து விழிப்புணர்வு மற்றும் பயிற்சி கூட்டம் நடைபெற்றது. மண்டபம் ஊராட்சி ஒன்றியம் சாத்தகோன்வலசை பஞ்சாயத்திற்கு உட்பட்ட அரியமான் பீச்சில் அருகே மீனாட்சி பீடம் ஆலயம் அமைந்துள்ளது. இந்த ஆலயம் நிர்வாகிகள்,குருக்கள் சார்பில் கோகுலம் செயல்பாடு போபல்ஸ் நாட்டு பசு மாடுகள் பராமரிப்பு பற்றிய விழிப்புணர்வு மற்றும் இயற்கை விவசாயம், சுற்றுச்சூழல் பாதுகாப்பு பற்றிய விழிப்புணர்வை கூட்டம் நடைபெற்றது.

இந்த கூட்டத்தில் அரியமான பகுதியை சேர்ந்த 20க்கும் மேற்பட்ட பெண்கள் கலந்து கொண்டனர். இந்நிகழ்ச்சியில் பசு மாட்டு சாணத்தில் இருந்து தயாரிக்கப்பட்ட திருநீறு மற்றும் தயிர், பால், சாணம் கோமியம், நெய் ஆகியவற்றை பயன்படுத்தி பஞ்சகவ்ய விளக்கு மற்றும் திருநீறு மற்றும் விநாயகர் ஆகியவற்றை தயாரிப்பது மற்றும் அதிலிருந்து கிடைக்கும் சக்தி பற்றி பயிற்சியாளர்கள் கலந்து கொண்டு பொதுமக்களிடையே விளக்கினர்.

The post நாட்டு பசு மாடுகள் பராமரிப்பு விழிப்புணர்வு appeared first on Dinakaran.

Related Stories: