இந்த நிலையில் மேற்கண்ட வழக்கில் உச்ச நீதிமன்ற நீதிபதிகள் சூர்யாகாந்த் மற்றும் என்.கோடீஸ்வர் சிங் ஆகியோர் வழங்கிய தீர்ப்பில், ‘‘பீகார் சட்ட மேலவையில் இருந்து சுனில் குமார் சிங் நீக்கப்பட்ட முடிவை ரத்து செய்யப்படுகிறது. குறிப்பாக சுனில் குமார் சிங் வகித்த சட்டமேலவை தொகுதிக்கு அறிவிக்கப்பட்ட இடைத்தேர்தலுக்கான முடிவையும் உச்ச நீதிமன்றம் ரத்து செய்கிறது. இதில் சுனில் குமார் சிங் நடவடிக்கை அவையை சீர்குலைக்கும் வகையில் இருந்தாலும், அதற்காக மேலவையில் இருந்து நீக்கம் செய்யக் கூடியது பெரிய தண்டனை ஆகும்.
குறிப்பாக சுனில்குமார் சிங் மட்டுமல்ல இன்னும் சில உறுப்பினர்கள் அவை நடவடிக்கைக்கு எதிரான கருத்துக்களை தெரிவித்த நிலையில், அவர் மட்டும் நீக்கம் செய்யப்பட்டது ஏற்க கூடியது ஒன்று இல்லை. மேலும் இருக்கும் நிலவரத்தை அடிப்படையாக கொண்டு அவை தலைவர் அனைவரையும் சமமாக நடத்தி இருக்க வேண்டும். அதனை செய்ய தவறி விட்டார் என்பது தெளிவாக தெரியவந்துள்ளது.
இதில் சுமார் ஏழு மாதங்களுக்கு மேலாக அவைக்கு வெளியே சுனில் குமார் சிங் உள்ள நிலையில், அதுவே அவருக்கு போதுமான தண்டனை ஆகும்.
இனி வரக்கூடிய நாட்களில் அவை நடவடிக்கைகளில் சுனில் குமார் சிங் பங்கேற்கலாம். அதற்கு எந்தவித தடையும் கிடையாது. நீக்கம் செய்யப்பட்டிருந்த காலகட்டத்திற்கு வழங்க வேண்டிய ஊதியம் மற்றும் பிற சலுகைகளுக்கான நிதியை அவருக்கு வழங்க வேண்டியதில்லை என்று தீர்ப்பளித்த நீதிபதிகள், இதுதொடர்பான வழக்கை முடித்து வைத்து உத்தரவிட்டனர். உச்ச நீதிமன்றத்தின் இந்த தீர்ப்பு பீகார் அரசியலில் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது.
The post முதல்வர் நிதிஷ்குமார் குறித்து அவதூறாக பேசியதால் நீக்கம் ராஷ்டிரிய ஜனதா தள எம்.எல்.சி. பதவி பறிப்பு ரத்து: உச்ச நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு appeared first on Dinakaran.
