நரசிங்கபுரம், பிப்.26: ஆத்தூர் வேளாண்மை உற்பத்தியாளர்கள் கூட்டுறவு விற்பனை சங்கத்தில், நேற்று முன்தினம் பருத்தி ஏலம் நடைபெற்றது. ஆத்தூர், கெங்கவல்லி, மஞ்சினி, கள்ளக்குறிச்சி, தலைவாசல், சின்னசேலம், பெரம்பலூர், தம்மம்பட்டி, வீரகனூர், மல்லிக்கரை உள்ளிட்ட பகுதிகளிலிருந்து 542 விவசாயிகள் 1,293.49 குவிண்டால் பருத்தி மூட்டைகளை ஏலத்திற்கு கொண்டு வந்தனர். சேலம், திருச்சி, கள்ளக்குறிச்சி, விழுப்புரம், கோவை, ஈரோடு உள்ளிட்ட மாவட்டங்களை சேர்ந்த 19 வியாபாரிகள், தரத்துக்கு ஏற்ற விலை நிர்ணயம் செய்தனர். இதில் ஆர்சிஎச் ரக பருத்தி குவிண்டால் ₹6589 வரையும், டிசிஎச் ரகம் ₹8021க்கும், கொட்டு ரகம் ₹3269 முதல் ₹4889 வரை ஏலம் போனது. மொத்தம் ₹76 லட்சத்திற்கு பருத்தி ஏலம் போனது. கடந்த வாரத்தை விட குவிண்டாலுக்கு ₹900 விலை உயர்ந்தது.
The post ₹76 லட்சத்திற்கு பருத்தி ஏலம் appeared first on Dinakaran.
