காஞ்சிபுரத்தில் இருந்து செய்யாறு, ஆரணி, திருவண்ணாமலை, வந்தவாசி, திண்டிவனம், விழுப்புரம், புதுச்சேரி மற்றும் தென் மாவட்டங்களுக்கு செல்லும் பிரதான சாலையான. இச்சாலையில் போக்குவரத்து அதிகரித்து எப்போதும் பரபரப்பாக காணப்படுகிறது. மேலும், செய்யாறு சிப்காட் பகுதியில் இருந்து சென்னை – பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையை அடைய கனரக வாகனங்கள் அதிகளவில் இந்த சாலை வழியாக செல்கின்றன.
இத்தகைய முக்கியத்துவம் வாய்ந்த இச்சாலையில் செவிலிமேடு பாலாறு அடுத்து புஞ்சை அரசன்தாங்கல் பகுதியில் சாலையோர பள்ளங்களால் அடிக்கடி விபத்துகள் ஏற்பட்டு, பொதுமக்கள் அவதிக்குள்ளாகி வருன்றனர். குறிப்பாக, திருவள்ளுவர் குடியிருப்பு பகுதியில் சாலையையொட்டி மெகா பள்ளங்கள் உள்ளதால், எதிரெதிரே 2 கனரக வாகனங்கள் வரும்போது, டூவீலரில் செல்வோர் ஒதுங்க வழியின்றி சிரமப்படுகின்றனர். இதனால், இப்பகுதியில் அடிக்கடி விபத்துகள் ஏற்படுகின்றன.
இதனை, குறிப்பிட்டு கடந்த 23ம்தேதி நமது நாளிதழில் படங்களுடன் விரிவான செய்திக் கட்டுரை வெளியானது. இதனைத்தொடர்ந்து நேற்று நெடுஞ்சாலைத் துறை சார்பில் பொக்லைன் இயந்திரம் மூலம் சாலையோர பள்ளங்கள் சீரமைக்கப்பட்டது. இதற்கு, மகிழ்ச்சி தெரிவித்த அப்பகுதி பொதுமக்கள், செய்தி வெளியிட்ட தினகரன் நாளிதழுக்கு நன்றி தெரிவித்தனர். மேலும், சாலை விரிவாக்கம் செய்யவும் அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வேண்டுகோள் விடுத்தனர்.
The post புஞ்சை அரசன்தாங்கல் பகுதியில் சாலையோர பள்ளங்கள் சீரமைப்பு appeared first on Dinakaran.
