அப்போது வீட்டில் பள்ளி ஆசிரியையின் தாய் மட்டும் இருந்துள்ளார். அவரும், அந்த நேரத்தில் குளியல் அறையில் குளித்துக் கொண்டிருந்தார். அப்போது வீட்டில் யாரும் இல்லாததை உணர்ந்த ஆன்லைன் டெலிவரி ஊழியர், பெண் குளிப்பதை தனது செல்போனில் வீடியோ எடுத்து ரசித்துள்ளார். அப்போது திடீரென குளியல் அறையின் ஜன்னல் அருகே யாரோ நிற்பதை உணர்ந்த பெண், கூச்சலிட்டு சத்தம் போட்டுள்ளார். இதனால் அச்சமடைந்த டெலிவரி ஊழியர் தான் கொண்டு வந்த பொருளை வீட்டிற்குள் வீசிவிட்டு தப்பி ஓடிவிட்டார். அதேநேரம் அந்த நபர் தான் கொண்டு வந்த பொருளை டெலிவரி செய்ததற்கான ‘ஓடிபி’ எண் பெற அந்த பொருளை ஆர்டர் செய்த பள்ளி ஆசிரியைக்கு போன் செய்து, உங்கள் வீட்டில் பொருளை வைத்துவிட்டேன். என்று கூறி ஓடிபி எண்ணை பெற்றுள்ளார்.
இதற்கிடையே பள்ளி முடிந்து வீட்டிற்கு வந்த ஆசிரியை, தனது அம்மாவிடம் ஆர்டர் செய்த பொருளை கேட்டுள்ளார். அப்போது நடந்த சம்பவத்தை அவர் தனது மகளிடம் கூறி அழுதுள்ளார். உடனே பள்ளி ஆசிரியை சாதூரியமாக செயல்பட்டு, தனது அம்மா குளிப்பதை வீடியோ எடுத்த ஆன்லைன் டெலிவரி ஊழியருக்கு மறுநாள் காலையில் போன் செய்து, அசை வார்த்தை கூறி அழைத்துள்ளார். அதன்படி அந்த நபரும் வீட்டிற்கு வந்துள்ளார். அப்போது வீட்டில் மறைந்து இருந்த பள்ளி ஆசிரியையின் கணவர் மற்றும் உறவினர்களுடன் சேர்ந்து அந்த நபரை பிடித்து சரமாரியாக உதைத்து, செல்போனை பறித்து ஆய்வு செய்தனர். அப்போது, பள்ளி ஆசிரியையின் தாய் குளிக்கும் வீடியோ காட்சி இருந்தது தெரியவந்தது. உடனே செல்போன் ஆதாரத்துடன் டெலிவரி ஊழியரை பள்ளி ஆசிரியை கோட்டூர்புரம் காவல் நிலையத்தில் ஒப்படைத்தார்.
அதன்படி போலீசார் விசாரணை நடத்திய போது, சின்னமலை வெங்கடாபுரம் வேளச்சேரி மெயின் ரோடு விநாயகர் கோயில் தெருவை சேர்ந்த சதீஷ்குமார் (36) என்றும், இவர் டெலிவரி பொருளை வீட்டிற்கு கொண்டு வந்த நேரத்தில் வீட்டில் ஆட்கள் இல்லாததால் தனது செல்போனில் வீடியோ எடுத்ததை ஒப்புக்கொண்டார். பிறகு அவரிடம் இருந்து செல்போன் மற்றும் பைக் பறிமுதல் செய்யப்பட்டது. செல்போனில் எடுக்கப்பட்ட ஆபாச வீடியோவை போலீசார் அழித்தனர். அதைதொடர்ந்து போலீசார் சதீஷ்குமார் மீது தொழில்நுட்ப சட்டப்பிரிவு உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்து அதிரடியாக கைது செய்தனர். பின்னர் சதீஷ்குமாரை போலீசார் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி புழல் சிறையில் அடைத்தனர்.
The post ஆர்டர் செய்த பொருளை கொடுக்க வந்தபோது பெண் குளிப்பதை வீடியோ எடுத்த ஆன்லைன் டெலிவரி ஊழியர்: தர்ம அடி கொடுத்து போலீசில் ஒப்படைப்பு appeared first on Dinakaran.
