ராசிபுரம் அருகே இலவச வீடு கட்டித்தரும் பெல்ஜியம் மாணவர்கள்

ராசிபுரம், பிப். 25: பெல்ஜியம் நாட்டை சேர்ந்த 11 மாணவ, மாணவிகள், தங்களது ப்ராஜெக்ட் பணிக்காக, நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் அடுத்த அத்தனூர் பகுதியில், 9 ஏழை எளிய மக்களுக்கு வீடு கட்டி வழங்க முடிவு எடுத்துள்ளனர். முதற்கட்டமாக முன்தொகை பணத்தை அனுப்பி உள்ளனர். தற்போது பணி நடைபெற்று வரும் நிலையில், பெல்ஜியம் நாட்டில் இருந்து தங்களது ப்ராஜெக்ட் பணிக்காக அத்தனூர் பகுதிக்கு வந்தனர். 5 மாணவிகள், 6 மாணவர்கள் என 11 பேர் கட்டுமான பணியில் ஈடுபட்டுள்ளனர். தங்களுக்காக வீடு கட்ட பணம் வழங்கிய பெல்ஜியம் நாட்டு மாணவ, மாணவிகளுக்கு நன்றி தெரிவிக்கும் விதமாக, கிராம மக்கள் ஆரத்தி எடுத்து மேளதாளங்கள் முழங்க கிராமத்தை சுற்றி அழைத்து வந்தனர். அப்போது சிறார்கள் நடனம் ஆடவே, பெல்ஜியம் நாட்டை சேர்ந்த மாணவ, மாணவிகளும் அவர்களுடன் சேர்ந்து ஆடி தங்களது மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர்.

The post ராசிபுரம் அருகே இலவச வீடு கட்டித்தரும் பெல்ஜியம் மாணவர்கள் appeared first on Dinakaran.

Related Stories: