நூலக அடையாள அட்டை வழங்கல்

 

சிவகங்கை, பிப். 22: சிவகங்கை கவியோகி சுத்தானந்த பாரதி மாவட்ட மைய நூலகத்தில் பள்ளி மாணவ, மாணவிகளுக்கு நூலக அடையாள அட்டை, புத்தகங்கள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. மாவட்ட மைய நூலகர் வெங்கடவேல்பாண்டி முன்னிலை வகித்தார். நூலகர் முத்துக்குமார் வரவேற்றார். முன்னாள் சென்னை பல்கலைக்கழக துணை வேந்தர் டாக்டர் கௌரி தலைமை வகித்து நூலக அடையாள அட்டை மற்றும் புத்தகங்களை மாணவ, மாணவிகளுக்கு வழங்கினார். எழுத்தாளர் ஈஸ்வரன் எழுதிய வைர நிலம் என்ற நூல் அறிமுகம் செய்யப்பட்டது. நூலக நண்பர்கள் திட்ட நிர்வாகிகள் முத்துக்கண்ணன், ரமேஷ்கண்ணன், ஈஸ்வரன், தேசிய நல்ல ஆசிரியர் கண்ணப்பன் மற்றும் பள்ளி, மாணவ, மாணவிகள், ஆசிரியர்கள் கலந்து கொண்டனர். நூலகர் கனகராஜ் நன்றி கூறினார்.

The post நூலக அடையாள அட்டை வழங்கல் appeared first on Dinakaran.

Related Stories: