ஜெயங்கொண்டம், பிப்.21: தமிழ்நாடு அரசு மாநில திட்டக்குழு, அரியலூர் மாவட்ட திட்டகுழு மற்றும் தொழில் முனைவோர் மேம்பாட்டு மற்றும் புத்தக நிறுவனம் அரியலூர் மாவட்டம். இணைந்து நடத்தும் (எப்பிடிபி) வளமிகு வட்டாரங்கள் ஆண்டிமடத்தில் மூன்று நாள் இலவச பயிற்சியாக தொழில் முனைவோர் மேம்பாட்டு பயிற்சி கூட்டமன்றத்தில் நடைபெற்றது. ஆண்டிமடம் வட்டார வளர்ச்சி அலுவலர் கஸ்தூரி குத்துவிளக்கேற்றி விழாவினை துவக்கி வைத்தார். இந்த விழாவில் துணை வட்டார வளர்ச்சி அலுவலர் சத்யராஜ் சிறப்புரையாற்றினார். அருண்குமார் பயனாளிகளுக்கு பயிற்சி அளித்தார். அரியலூர் மாவட்ட திட்டம் பிரவீன் விழாவினை ஏற்பாடு செய்து ஒருங்கிணைத்திருந்தார். இந்த பயிற்சி முகாமில் 38 பயனாளிகள் கலந்து கொண்டார்.
The post ஆண்டிமடத்தில் தொழில் முனைவோர் மேம்பாட்டு பயிற்சி appeared first on Dinakaran.
