நீரில் அடித்து செல்லப்பட்ட வடமாநில டிரைவர் மாயம்

ஈரோடு,பிப்.21: மஹாராஷ்டிரா மாநிலம் மெலகன் பகுதியைச் சேர்ந்தவர் குரைஷிநூர் முகமது (25). டிரைவரான அவர், கேரளாவில் இருந்து ஹைதராபாத்துக்கு கொண்டு செல்வதற்காக லாரியில் லோடு ஏற்றி வந்துள்ளார். இந்நிலையில், நேற்று முன்தினம் லாரியை நிறுத்தி விட்டு, நசியனூர் எல்.பீ.பி வாய்க்காலில் சக டிரைவர்களுடன் சேர்ந்து குளித்துள்ளார்.

அப்போது, குரைஷிநூர் முகமதுக்கு நீச்சல் தெரியாத என்பதால், நீரில் அடித்துச் செல்லப்பட்டதாக தெரிகிறது. இதனால் அதிர்ச்சியடைந்த சக டிரைவர்கள் தேடியும், அவர் கிடைக்கவில்லை. இதனையடுத்து, கடலூர் மாவட்டம் காட்டுமன்னார் கோவிலைச் சேர்ந்த லாரி டிரைவர் வேலவன் கொடுத்த புகாரின் அடிப்படையில், சித்தோடு போலீசார் விசாரித்து வருகின்றனர்.

The post நீரில் அடித்து செல்லப்பட்ட வடமாநில டிரைவர் மாயம் appeared first on Dinakaran.

Related Stories: