கனிமார்க்கெட் வணிக வளாகத்தில் பார்க்கிங் கட்டணத்தை குறைக்க ஜவுளி வியாபாரிகள் வலியுறுத்தல்

ஈரோடு,பிப்.21: ஈரோடு மாநகராட்சி கட்டுப்பாட்டின் கீழ்,கனிமார்க்கெட் வணிக வளாகம் செயல்பட்டு வருகிறது. இதில், 290க்கும் மேற்பட்ட கடைகள் செயல்படுகின்றன. வணிக வளாகத்தில் வாகனங்கள் நிறுத்த பார்க்கிங் தனியாருக்கு ஏலம் விடப்பட்டுள்ளது. நான்கு மணி நேரம் வரை, இருசக்கர வாகனங்களுக்கு, ரூ.20ம், நான்கு சக்கர வாகனங்களுக்கு, ரூ.50ம் வசூலிக்கப்பட்டு வரப்படுகிறது. இந்த கட்டணம் அதிகமாக இருப்பதால், வணிக வளாகத்துக்கு வரும் வாடிக்கையாளர்கள் திரும்பி செல்வதாகவும் இதனால் கட்டணத்தை குறைக்க வேண்டும் என்றும் ஜவுளி வியாபாரிகள் தெரிவித்தனர்.

இதுகுறித்து ஜவுளி வியாபாரிகள் கூறியதாவது: பார்க்கிங் கட்டணம் உயர்வால், கனி மார்க்கெட் வணிக வளாகத்துக்கு வரும் வாடிக்கையாளர்கள் பலரும்,நுழைவு வாயிலோடு திரும்பி செல்கின்றனர். அவர்கள், சாலையோரங்களில் புதியதாக போடப்பட்ட கடைகளை நாடி செல்கின்றனர்.இதனால், எங்களுக்கு விற்பனை கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. எனவே, இவ்விவகாரத்தில் மாநகராட்சி நிர்வாகம் தலையிட்டு, பார்க்கிங் கட்டணத்தை குறைக்க வேண்டும். இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.

The post கனிமார்க்கெட் வணிக வளாகத்தில் பார்க்கிங் கட்டணத்தை குறைக்க ஜவுளி வியாபாரிகள் வலியுறுத்தல் appeared first on Dinakaran.

Related Stories: