தூத்துக்குடி, ஜன. 22: தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள அனைத்து அஞ்சலகங்களிலும் செயல்படுத்தப்படும் பொது சேவை மையத்தை பொதுமக்கள் பயன்படுத்திக் கொள்ளுமாறு முதுநிலை கோட்ட கண்காணிப்பாளர் சுரேஷ்குமார் கேட்டுக் கொண்டுள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: பொதுமக்களின் வசதிக்காக பல்வேறு சேவைகளை ஒரே இடத்தில் பெறும் சிஎஸ்சி பொது சேவை மையம், தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள அனைத்து அஞ்சலகங்களிலும் செயல்படுகிறது.
இதன் மூலம் மின் கட்டணம் செலுத்துதல், ஜீவன் பிரமான் – ஓய்வூதியர் சான்று, கைப்பேசி ரீசார்ஜ், தொலைபேசி, பிராட்பேண்ட் ரீசார்ஜ், டிடிஹெச் கட்டணங்கள், காப்பீடு கட்டணம், விமானம் மற்றும் பேருந்து முன்பதிவு, பான் கார்டு விண்ணப்பம், பாஸ்போர்ட் விண்ணப்பம் உள்ளிட்ட பல்வேறு சேவைகளை பொதுமக்கள் எளிதாகப் பெறலாம். எனவே இச்சேவைகளை பெற அருகிலுள்ள அஞ்சலகங்களைத் தொடர்பு கொள்ளலாம். இவ்வாறு தெரிவித்துள்ளார்.
The post தூத்துக்குடி மாவட்டத்தில் அனைத்து அஞ்சலகத்திலும் பொது சேவை மையம் appeared first on Dinakaran.
