வட அமெரிக்க நாடான பொலிவியாவின் டோமாஸ் ஃப்ரியாஸ் மாகாணத்தில் உள்ள யோகல்லாவில் உள்ள ஒரு நெடுஞ்சாலையில், ஒரு பேருந்து விபத்துக்குள்ளானது. 2625 அடி பள்ளத்தாக்கில் பேருந்து கவிழ்ந்ததில் பேருந்தில் பயணித்த 31 பேர் உயிரிழ்ந்தனர். இந்த விபத்தில் காயமடைந்தவர்களில் 4 குழந்தைகள் உள்பட 14 பேர் மருத்துவமனையில் சிகிச்சைகாக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
போடோசி மற்றும் ஒருரோ நகரங்களுக்கு இடையேயான ஒரு குறுகிய இருவழிப் பாதையில் இந்த விபத்து நிகழ்ந்துள்ளது. வளைவுகள் அதிகம் உள்ள பள்ளத்தாக்கு பகுதியில் பேருந்தை அதிவேகமாக இயக்கியதே விபத்துக்கு காரணம் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். விபத்து நடந்த இடத்தில் கூர்மையான, செங்குத்தான சரிவுகள் இருப்பதால், அந்த பகுதியில் விபத்துகள் அதிகளவில் ஏற்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
The post பொலிவியாவில் 2625 அடி பள்ளத்தாக்கில் பேருந்து கவிழ்ந்து விபத்திற்குள்ளானதில் பேருந்தில் பயணித்த 31 பேர் பலி appeared first on Dinakaran.
