ஒரு சில தமிழ் படங்களிலும் இவர் நடித்தார். மலையாள நடிகர்கள் சங்க பொதுசெயலாளராகவும் இவர் இருந்தார். இந்நிலையில் கடந்த சில வருடங்களுக்கு முன் சினிமாவில் நடிக்க வாய்ப்பு தருவதாக கூறி நடிகர் சித்திக் திருவனந்தபுரத்திலுள்ள ஒரு ஓட்டலுக்கு வரவழைத்து தன்னை பலாத்காரம் செய்ததாக ஒரு இளம்பெண் புகார் கூறினார். இது தொடர்பாக திருவனந்தபுரம் கன்டோன்மென்ட் போலீசார் சித்திக் மீது வழக்கு பதிவு செய்தனர்.
இந்த வழக்கில் உச்சநீதிமன்றம் இவருக்கு முன்ஜாமீன் வழங்கியது. இந்நிலையில் குற்றப்பிரிவு போலீசார் விரைவில் நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிகையை தாக்கல் செய்ய தீர்மானித்துள்ளனர். இந்த குற்றப்பத்திரிகையில் இடம்பெற்றுள்ள சில விவரங்கள் தற்போது வெளியாகியுள்ளன. சினிமா வாய்ப்பு தருவதாக கூறி இளம்பெண்ணை ஓட்டலுக்கு வரவழைத்து நடிகர் சித்திக் பலாத்காரம் செய்ததற்கு முக்கிய ஆதாரங்கள் உள்ளன.
தன்னை ஏமாற்றியது தொடர்பாக போலீசில் புகார் செய்யப் போவதாக இளம்பெண் கூறியபோது, தன்னை எதுவும் செய்ய முடியாது என்று கூறி சித்திக் அவரை மிரட்டியுள்ளார். இதற்கு சாட்சிகள் உள்ளன. இவ்வாறு குற்றப்பத்திரிகையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. குற்றப்பிரிவு ஐஜியின் அனுமதி கிடைத்தவுடன் குற்றப்பத்திரிகையை நீதிமன்றத்தில் தாக்கல் செய்ய போலீசார் தீர்மானித்துள்ளனர்.
The post இளம்பெண்ணை ஓட்டலுக்கு வரவழைத்து நடிகர் சித்திக் பலாத்காரம் செய்ததற்கு ஆதாரங்கள் உள்ளன: குற்றப்பத்திரிகையில் பரபரப்பு தகவல்கள் appeared first on Dinakaran.
