தெருநாய்களால் கொல்லப்படும் கால்நடைகள்

 

திருப்பூர், பிப்.17: மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியின் திருப்பூர் மாவட்ட செயலாளர் சி.மூர்த்தி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: திருப்பூர் மாவட்டத்தில் ஊத்துக்குளி, காங்கயம்,வெள்ளகோவில் மற்றும் தாராபுரம் ஒன்றியங்களிலும், இதர கிராமப்புறப் பகுதிகளிலும் விவசாயிகளின் வளர்ப்பு கால்நடைகளான ஆடுகள்,எருமை மற்றும் மாடுகளின் கன்றுக்குட்டிகள், கோழிகளை தெரு நாய்கள் கடித்துக் கொன்று வருகின்றன. கடும் நெருக்கடியில் விவசாயம் பாதிக்கப்பட்டு விளைபொருட்களுக்கு கட்டுப்படியான விலை கிடைக்காமல் விவசாயிகள் திண்டாடி வரும் நிலையில்,கால்நடை வளர்ப்பு தான் ஏழை விவசாயிகளுக்கு குறைந்தபட்ச வாழ்வாதாரமாக கை கொடுத்து வருகிறது.

இந்நிலையில் தெரு நாய்களால் கால்நடைகள் கொல்லப்பட்டு விவசாயிகளுக்கு லட்சக்கணக்கான ரூபாய் இழப்பு ஏற்படுகிறது. தெரு நாய்கள் கடித்து கால்நடைகள் கொல்லப்பட்டு பொருளாதார இழப்பு ஏற்படுத்தும் பிரச்னைக்கு நிரந்தர தீர்வு காண விவசாயிகள் தொடர்ந்து கோரி வருகின்றனர். எனவே தெருநாய்களால் கொல்லப்பட்ட அனைத்து கால்நடைகள் குறித்தும் கணக்கெடுப்பு நடத்தி அதற்கு உரிய இழப்பீடு முழுமையாக வழங்க வேண்டும். பொருளாதார இழப்பு ஏற்படுத்தி வரும் தெரு நாய்களைக் கட்டுப்படுத்த உறுதியான நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

The post தெருநாய்களால் கொல்லப்படும் கால்நடைகள் appeared first on Dinakaran.

Related Stories: