வாலாஜாபாத்தில் யோகா மூலம் மாணவர்கள் போதை ஒழிப்பு விழிப்புணர்வு

 

வாலாஜாபாத்,பிப்.17: வாலாஜாபாத்தில் போதை ஒழிப்பு விழிப்புணர்வை முன்னிட்டு உலக சாதனை நிகழ்ச்சி நேற்று வாலாஜாபாத் அறிஞர் அண்ணா அரசினர் மேல்நிலைப் பள்ளி விளையாட்டு மைதானத்தில் நேற்று நடைபெற்றது. விழாவில் காஞ்சிபுரம் மாவட்டத்தை சார்ந்த சிலம்பம் மற்றும் யோகா பயின்று வரும் பள்ளி, கல்லூரி மாணவ மாணவிகள் 250க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டு தொடர்ச்சியாக 30 நிமிடம் யோகாவில் சூரிய நமஸ்காரம், 30 நிமிடம் சிலம்பத்தில் நடுக்கம்பு சுற்றுதல் உள்ளிட்டவைகளை செய்து காண்பித்து அசத்தினர்.

இந்நிகழ்ச்சியில் கலந்து கொண்ட அனைத்து பள்ளி, கல்லூரி மாணவர்களுக்கு சான்றிதழ்கள் நினைவு பரிசுகள் வழங்கப்பட்டன. இந்த நிகழ்ச்சியில் ஒன்றிய குழு துணை தலைவர் சேகர், பேரூர் செயலாளர் பாண்டியன், பேரூராட்சி மன்ற துணை தலைவர் சுரேஷ்குமார், திமுக பேரூர் இளைஞரணி அமைப்பாளர் சுகுமாரன் உள்ளிட்ட பேரூராட்சி மன்ற கவுன்சிலர்கள், பள்ளி கல்லூரி மாணவ மாணவிகளின் பெற்றோர், பொதுமக்கள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

The post வாலாஜாபாத்தில் யோகா மூலம் மாணவர்கள் போதை ஒழிப்பு விழிப்புணர்வு appeared first on Dinakaran.

Related Stories: