வடசேரி பஸ் நிலையத்தில் தமிழ்நாடு அரசின் புகைப்பட கண்காட்சி

நாகர்கோவில், பிப்.15: தமிழ்நாடு அரசின் மூலம் அனைத்து துறைகளின்கீழ் செயல்படுத்தப்படும் திட்டங்கள் குறித்த புகைப்படக்கண்காட்சி மாவட்ட செய்தி மக்கள் தொடர்புத்துறையின் சார்பில் நடந்து வருகிறது. இதன் ஒரு கட்டமாக வடசேரி பஸ் நிலையத்தில் புகைப்படக்கண்காட்சி நடைபெற்றது. முதலமைச்சரின் விரிவான மருத்துவ காப்பீடு திட்டம், மக்களை தேடி மருத்துவம், சாலை, பேருந்து, குடிநீர் உள்ளிட்ட அடிப்படை வசதிகள் மேம்பாட்டு திட்டங்கள், இன்னுயிர் காப்போம் – நம்மைக் காக்கும் 48 திட்டம், கலைஞரின் வரும்முன் காப்போம் திட்டம், நகர்ப்புற வேலைவாய்ப்புத் திட்டம், முதலமைச்சரின் காலை உணவு திட்டம், மகளிர் சுய உதவிக் குழுவினர்களுக்கு கடனுதவிகள் வழங்கியது, கலைஞர் மகளிர் உரிமைத்திட்டம், புதுமைப்பெண் திட்டம், உங்களைத்தேடி உங்கள் ஊரில், பள்ளி மாணவ, மாணவியர்களுக்கு விலையில்லா மிதிவண்டி வழங்கும் திட்டம் உள்ளிட்ட பல்வேறு துறைகளின் சார்பில் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் வழங்கிய திட்டங்கள் குறித்த புகைப்படங்கள் மற்றும் பல்வேறு துறைகளில் பணியின்போது காலமானவர்களின் வாரிசுதாரர்களுக்கு பணி நியமன ஆணை வழங்கியது ஆகியவை குறித்தும் பொதுமக்கள் அறிந்து கொள்ளும் வகையில் காட்சிப்படுத்தப்பட்டது. இதை ஏராளமான பொதுமக்கள் கண்டுகளித்தனர்.

அமைச்சருக்கு வரவேற்பு
நாகர்கோவிலில் நடந்த சமுதாய வளைகாப்பு விழாவில் கலந்துகொள்ள வருகை தந்த சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை அமைச்சர் கீதாஜீவனை குமரி திமுக கிழக்கு மாவட்ட செயலாளரும், மேயருமான மகேஷ் வரவேற்றார்.

The post வடசேரி பஸ் நிலையத்தில் தமிழ்நாடு அரசின் புகைப்பட கண்காட்சி appeared first on Dinakaran.

Related Stories: