3.75 ஏக்கர், 13 மாடி, 300 அறைகளுடன் டெல்லியில் ரூ150 கோடியில் ஆர்எஸ்எஸ் அலுவலகம்: பிப்.19ல் திறப்பு விழா

புதுடெல்லி: ஆர்எஸ்எஸ் அலுவலகம் டெல்லி கேசவ் கஞ்ச பகுதியில் அமைந்துள்ளது. இந்த அலுவலகத்தை மறுசீரமைக்கும் பணிகள் கடந்த 2018ம் ஆண்டு தொடங்கின. தற்போது பணிகள் முடிக்கப்பட்டுள்ளன. 3.75 ஏக்கர் வளாகத்தில் 5 லட்சம் சதுர அடியில் கட்டப்பட்ட 13 மாடிக் கட்டிடத்தில் மொத்தம் 300 அறைகள் இடம் பெற்றுள்ளன. ரூ.150 கோடிமதிப்பில் இந்த கட்டிடம் கட்டப்பட்டுள்ளது.

குஜராத்தைச் சேர்ந்த கட்டிடக் கலைஞர் அனுப் டேவ் இதை வடிவமைத்துள்ளார். பிப்.19ம் தேதி இந்த அலுவலகம் திறக்கப்பட்டு ம். இதற்கான விழாவில் நாடு முழுவதும் இருந்து அன்று கிட்டத்தட்ட 1,500 பேர் கலந்து கொள்வார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

The post 3.75 ஏக்கர், 13 மாடி, 300 அறைகளுடன் டெல்லியில் ரூ150 கோடியில் ஆர்எஸ்எஸ் அலுவலகம்: பிப்.19ல் திறப்பு விழா appeared first on Dinakaran.

Related Stories: