வெயிலில் மின்னிய வயல் தைப்பூசத்தை முன்னிட்டு திருவாரூர் முருகன் கோயிலில் பக்தர்கள் குவிந்தனர்

திருவாரூர், பிப். 12: தைப்பூச விழாவினையொட்டி திருவாரூர் பகுதி முருகன் கோயிலில் ஏராளாமான பக்தர்கள் வழிப்பட்டனர். தமிழகத்தில் தைப்பூச நாளில் வடலூர் ராமலிங்கம் சுவாமி அருட்பெருஞ்ஜோதி தரிசனம் மட்டுமின்றி திருச்செந்தூர், பழனி உள்ளிட்ட மாநிலம் முழுவதும் இருந்து வரும் முருகன் கோயில்களில் சிறப்பு பூஜைகள் நடைபெறுவது வழக்கம். மேலும் இந்த பூஜைகளில் லட்சகணக்கான பக்தர்கள் கலந்து கொள்வார்கள்.

இந்நிலையில் நேற்று நடைபெற்ற இந்த தைப்பூச திருவிழாவையொட்டி திருவாரூர் கீழ வீதியில் இருந்து வரும் பழனி ஆண்டவர் கோயில், வடக்கு வீதியில் இருந்து வரும் பழனி ஆண்டவர் கோயில், கோயில்கந்தன்குடி சுப்பிரமணியசுவாமி கோயில், எண்கண் சுப்ரமணியசுவாமி கோயில் உட்பட பல்வேறு முருகன் கோயில்களில் சிறப்பு பூஜைகள் நடைபெற்றது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டு முருகனை வழிப்பட்டனர்.

The post வெயிலில் மின்னிய வயல் தைப்பூசத்தை முன்னிட்டு திருவாரூர் முருகன் கோயிலில் பக்தர்கள் குவிந்தனர் appeared first on Dinakaran.

Related Stories: