உடன்குடி, பிப். 12: தூத்துக்குடி தெற்கு மாவட்ட இந்து முன்னணி சார்பில் கொள்கை விளக்க தெருமுனை பிரசார கூட்டம், உடன்குடி பஜார் பாரதி திடலில் நடந்தது. கூட்டத்திற்கு தலைமை வகித்த மாநில துணை தலைவர் ஜெயக்குமார், இந்து முன்னணியின் போராட்ட வரலாறை எடுத்துரைத்தார். கூட்டத்தில் இந்து ஆட்டோ முன்னணி மாநில செயலாளர் சக்திவேலன், மாவட்ட செயலாளர்கள் சுடலைமுத்து, அருணாசலம், நகர தலைவர் சித்திரைபெருமாள், நகர பொருளாளர் சதீஷ்கிருஷ்ணன், நகர செயலாளர் ஆத்திசெல்வம், நகர நிர்வாகிகள் விக்னேஷ்பாண்டியன், தங்கராம், திருச்செந்தூர் பொறுப்பாளர்கள் மாயவனம், ஆனந்த், உடன்குடி ஒன்றிய பாஜ தலைவர் சங்கரகுமார் ஜயன், முன்னாள் தலைவர் ஜெயக்குமார், பாஜ மாவட்ட பிறமொழி பிரிவு செயலாளர் ஜெயா நாச்சியார் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
The post இந்து முன்னணியினர் தெருமுனை பிரசாரம் appeared first on Dinakaran.
