வித்யாசாகர் மகளிர் கல்லூரி முன்னாள் மாணவியர் சந்திப்பு

செங்கல்பட்டு: வித்யாசாகர் மகளிர் கல்லூரியின் முன்னாள் மாணவியர் சந்திப்பு நிகழ்ச்சி நடைபெற்றது. செங்கல்பட்டு வித்யாசாகர் மகளிர் கல்லூரியின் 20ம் ஆண்டையொட்டி முன்னாள் மாணவியர் சந்திப்பு நிகழ்ச்சி நேற்று‌ நடந்தது. இதில், முன்னாள் மாணவியர் சந்திப்பு நிகழ்ச்சி மிகவும் விமரிசையாகவும் சிறப்பாகவும் நடைபெற்றது. மேலும், 2000க்கும் மேற்பட்ட முன்னாள் மாணவியர் கலந்துகொண்டனர். இந்நிகழ்ச்சியில், 2005ம் ஆண்டு முதல் 2024ம் ஆண்டு வரை கல்லூரியின் மாணவியர் மன்ற குழுவில் சிறப்பாக பணியாற்றிய முன்னாள் மாணவியருக்கு பரிசுகள் வழங்கி கௌரவிக்கப்பட்டது. முன்னாள் மாணவியர் அனைவரும் தங்களுடைய கல்லூரி பருவங்களின் இனிமையான நினைவுகளை நினைவுகூர்ந்து மகிழ்ந்தனர்.

மேலும் கல்லூரியின் வளர்ச்சிக்கான புதிய பரிந்துரைகளை முன்வைத்தனர். மேலும், முன்னாள் மாணவிகளுக்கென்று கலைநிகழ்ச்சிகள் மற்றும் பலவகையான விளையாட்டுப் போட்டிகள் நடத்தப்பட்டன. வெற்றிப் பெற்ற மாணவியர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன. இந்நிகழ்ச்சியில், வித்யாசாகர் கல்வி குழுமத்தின் தாளாளர் விகாஸ் சுரானா கல்லூரி முதல்வர் முனைவர் இரா.அருணாதேவி இந்நிகழ்ச்சியில் கலந்துகொண்டு மாணவியர் வாழ்வில் மென்மேலும் சிறக்க வாழ்த்தினர். முன்னாள் மாணவியர் தங்களது சக மாணவிகளோடு தங்களது நட்பையும் உறவையும் புதுபிக்க இந்நிகழ்ச்சி ஒரு ஏணி போல் அமைந்தது என்று கல்லூரி நிர்வாகத்தை பாரட்டி நன்றி தெரிவித்தனர்.

The post வித்யாசாகர் மகளிர் கல்லூரி முன்னாள் மாணவியர் சந்திப்பு appeared first on Dinakaran.

Related Stories: