பசும்பலூர் மாரியம்மன் கோயிலில் ஒலிபெருக்கி அமைக்க கோரி பக்தர்கள் கலெக்டரிடம் மனு

பெரம்பலூர்,பிப்.11: பசும்பலூர் மாரியம்மன் கோயிலில் நேர அறிவிப்புடன் ஒலிபெருக்கி அமைத்துக் கொள்ள அனுமதி கேட்டு பசும்பலூர் கிராம சமயபுரம் நடை மாலை குழுவினர் பெரம்பலூர் கலெக்டர் அலுவலகத்தில் கோரிக்கை மனு அளித்தனர். பெரம்பலூர் மாவட்ட கலெக்டர் அலுவலக குறைதீர்க்கும் நாள் கூட்ட அரங்கில் நேற்று பொதுமக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் கலெக்டர் கிரேஸ் பச்சாவ் தலைமையில் நடை பெற்றது. இந்தக் கூட்டத்திற்கு பெரம்பலூர் மாவட்டம், வேப்பந்தட்டை தாலுக்கா, பசும்பலூர் கிராமத்தைச் சேர்ந்த சமயபுரம் நடைமாலை குழுவினர் அவ்வூரைச் சேர்ந்த செல்வம் மகள் சுசிலா தலைமையில்,

இந்திய மாணவர் சங்கத் தலைவர் ராமகிருஷ்ணன் முன்னிலையில் திரண்டு வந்து அளித்த கோரிக்கை மனுவில் தெரிவித்திருப்பதாவது : எங்கள் பசும்பலூர் கிராமத்தில் ஆண்டு தோறும் சமயபுரம் மாரியம்மன் கோவிலுக்கு நாங்கள் குழுவாக நடை மாலை செல்வது வழக்கம் அதன்படி நாங்கள் நடை மாலையாக செல்லும் முன் பக்த கோடிகளாகிய நாங்கள் எங்கள் பகுதி மக்களுக்குச் சொந்தமான மாரியம்மன் கோவிலில் ஒலிபெருக்கி அமைத்து ஒன்பது நாள் நிகழ்ச்சி நடத்தி பின்னர் தான் நடைமுறையாக செல்வது வழக்கம். அதன்படி, இந்த ஆண்டு பிப்ரவரி 16ஆம் தேதி முதல் 27ஆம் தேதி முடிய எங்கள் ஊர் மாரியம்மன் கோவிலில் நிகழ்ச்சிகள் நடத்துவதற்கும், தினமும் கிராமப் பொதுமக்கள் நேரத்தை அறிந்து கொள்ளும் வகையில் ஒலிபெருக்கி அமைத்துக் கொள்வதற்காக தங்கள் அனுமதி வழங்க வேண்டும் என அந்தக் கோரிக்கை மனுவில் தெரிவித்துள்ளனர்.

The post பசும்பலூர் மாரியம்மன் கோயிலில் ஒலிபெருக்கி அமைக்க கோரி பக்தர்கள் கலெக்டரிடம் மனு appeared first on Dinakaran.

Related Stories: