நாய்கள் கடித்து 4 பேர் ஜி.ஹெச்சில் அனுமதி

நாமக்கல், பிப்.11: நாமக்கல் மாநகராட்சி தொட்டிப்பட்டி, கோனாம்பரப்பு கிராமத்தில் 50க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசிக்கின்றனர். நேற்று முன்தினம், அக்கிராமத்தை சேர்ந்த முருகவேல் என்பவரது மகள் தன்யா (3) வீட்டின் அருகே நின்று கொண்டிருந்தபோது, அங்கு சுற்றித்திரிந்த தெருநாய்கள் சிறுமியை கடித்தது. இதனால் சிறுமி அலறினாள். இதை பார்த்து அங்கிருந்தவர்கள் நாய்களை விரட்டி அடித்தனர். ஆனால் அந்த நாய்கள், அந்த பகுதியை சேர்ந்த சின்னம்மாள், லட்சுமணன், சரவணன் உள்பட 7 பேரையும் கடித்து குதறியது. அங்கிருந்தவர்கள் காயமடைந்தவர்களை மீட்டு, நாமக்கல் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு வந்தனர். இங்கு அவர்களுக்கு மருத்துவர்கள் தடுப்பூசி போட்டு சிகிச்சை அளித்தனர். சிறுமி உள்பட 4 பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.

The post நாய்கள் கடித்து 4 பேர் ஜி.ஹெச்சில் அனுமதி appeared first on Dinakaran.

Related Stories: