கேமன் தீவுகளுக்கு தென்மேற்கே 209 கி.மீ தொலைவில் கரிபியன் கடலில் 8.0 ரிக்டர் அளவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. கேமன் தீவுகள், ஜமைக்கா, கொலம்பியா, போர்ட்டோ ரிக்கோ உள்ளிட்ட கரிபியன் கடலை ஒட்டிய தீவுகள் மற்றும் நாடுகளுக்கு சர்வதேச சுனாமி தகவல் மையம் சுனாமி அபாய எச்சரிக்கை விடுத்துள்ளது.