டெல்லி மக்களின் ஆணையை பணிவுடன் ஏற்றுக்கொள்கிறோம்: ராகுல்காந்தி கருத்து

டெல்லி சட்டப்பேரவை தேர்தலில் தொடர்ந்து மூன்றாம் முறையாக காங்கிரஸ் கட்சி ஒரு இடத்தில் கூட வெற்றி பெற முடியவில்லை. இதுபற்றி மக்களவை எதிர்க்கட்சி தலைவர் ராகுல்காந்தி தனது டிவிட்டர் பதிவில் கூறியிருப்பதாவது: டெல்லியின் ஆணையை நாங்கள் பணிவுடன் ஏற்றுக்கொள்கிறோம்.

மாநிலத்தின் அனைத்து காங்கிரஸ் தொண்டர்களின் அர்ப்பணிப்பிற்காகவும், ஆதரவளித்த அனைத்து வாக்காளர்களுக்கும் மனமார்ந்த நன்றி.டெல்லியின் முன்னேற்றத்திற்காகவும், மாசு, விலைவாசி உயர்வு மற்றும் ஊழலுக்கு எதிராகவும் போராட்டம் தொடரும். இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

The post டெல்லி மக்களின் ஆணையை பணிவுடன் ஏற்றுக்கொள்கிறோம்: ராகுல்காந்தி கருத்து appeared first on Dinakaran.

Related Stories: