தனியார்மய நடவடிக்கையை கைவிடுதல் உட்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி பிப்.13ம் தேதி ஆர்ப்பாட்டம்: போக்குவரத்து தொழிற்சங்க கூட்டமைப்பு அறிவிப்பு

சென்னை: தனியார்மய நடவடிக்கையை கைவிடுதல் உட்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி பிப்.13ம் தேதி ஆர்ப்பாட்டம் நடைபெறும் என போக்குவரத்து தொழிற்சங்க கூட்டமைப்பு அறிவித்துள்ளது. போக்குவரத்து கழகங்களில் செயல்படும் தொழிற்சங்கங்களின் கூட்டமைப்பின் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இதில் சிஐடியு, ஏஐடியுசி, டிடிஎஸ்எப் சங்க பிரதிநிதிகள் பங்கேற்றனர். இந்த கூட்டத்தில் பணி ஓய்வுபெற்ற தொழிலாளர்களின் ஓய்வுகால பலன்களை வழங்க வேண்டும். ஊதிய ஒப்பந்தம் முடிவடைந்து 15 மாதகாலம் ஆன நிலையிலும், முறையாக ஊதிய பேச்சுவார்த்தை நடத்தவில்லை, தனியார்மய நடவடிக்கையைக் கைவிட வேண்டும் என கோரப்பட்டது. 2025-26 பட்ஜெட்டில் வரவுக்கும் செலவுக்குமான வித்தியாசத் தொகைக்கு நிதி வழங்க அரசு நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். மேற்கண்ட கோரிக்கைகளை வலியுறுத்தி, வரும் பிப்.13ம் தேதி அனைத்து மண்டல தலைமையகங்களிலும் ஆர்ப்பாட்டங்களை நடத்த வேண்டும். வேண்டும் அதேபோல், பாதிக்கப்பட்ட 93,000 ஓய்வூதியர்களின் கோரிக்கைகளை முன்வைத்து நடைபெறும் இயக்கத்தில் ஓய்வூதியர்களும் பெருமளவிற்கு பங்கெடுக்க வேண்டும்.

The post தனியார்மய நடவடிக்கையை கைவிடுதல் உட்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி பிப்.13ம் தேதி ஆர்ப்பாட்டம்: போக்குவரத்து தொழிற்சங்க கூட்டமைப்பு அறிவிப்பு appeared first on Dinakaran.

Related Stories: